கவிதைகளும் தத்துவங்களும் IV

௧, ஆலயம்விட்டு சிறுதூரம் சென்றாலும்
சிவிகையில் செல்வதே சிறப்பு
௨, நினைவுகள் கொடுத்திடாமல்
கண்களை திருடிவிட்டேன்..
வேதனைகள் இனி எனக்குமட்டுமானது.
௩, அவள் அறியாதவாறு அவளை ரசிப்பதில்
அவள் கலப்படமில்லா பேரழகு
௪, தலையணையிடம் கண்ணீர்கதை பேசாதே
நான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன்
௫, ஒழுக்கத்துடன் இருப்பின்
ஒருத்தியுடனான காமம் அழகு