நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 09
![](https://eluthu.com/images/loading.gif)
" ஹா பவி!! எனக்கு பிடித்த பெயர். பார்ட்டியில் கலந்து கொண்டால் ஜாலியாக இருக்க வேண்டியது தானே ! ஏன் இந்த சோகம் ? நானும் விடுமுறையை கழிக்கத்தான் கடற்கரை வந்தேன். பார்ட்டி எல்லாம் எனக்கும் பிடிக்கும். பகல் எல்லாம் பார்ட்டியில் தான் இருந்தேன். உன் நல்ல நேரம் இரவை கடற்கரையில் கழிக்க வந்தேன். உன்னை உன்னுடன் இருந்தவர்கள் தனியாகவிட்டு போய் விட்டார்கள் என்று வறுத்தப்படுகின்றாயா? கவலைப் படாதே! கடற்கரையில் கடலில் விளையாடி சந்தோஷமாக இரு என்றான். அவளுக்கு அந்த நாளின் பகல் பொழுதில், ராணுவ கப்பலில் நடந்த பகட்டான பார்ட்டி ஞாபகம் வந்தது. அந்த பார்ட்டியில் தான் மகிழ்ச்சியோடு தன் காதலனை சந்திக்க காத்திருந்ததை நிணைத்துப்பார்த்தாள். அந்த பார்ட்டி முடிந்ததும் அவள் ஆசைகள், கனவுகள் எல்லாம் முடிந்துவிடும் என்று அப்போது அவள் சிறிதும் நிணைத்து பார்க்கவில்லை. விதியின் விளையாட்டில் ஒரே நாளில் தனக்கான அத்தனையும் பறிபோய்விட்ட சோகத்தில் அவள் இருந்தாள்.
ஏதோ யோசனையில் ஆழ்ந்தவளை கண்டான் மதன். அவளுடைய அழகு அவனை ஈர்த்தது. அவளுடைய வளமான அழகும், வடிவான உடலும், அந்த இருட்டிலும் ரோஜா இதழ் போல் சிவந்திருந்த அவள் உதடுகளை கண்டு மெய்மறந்தான். அந்த கடற்கரையை தன் பூக்குவியல் மேனி அழகால் சோலைவனம் போல் ஆக்கிவிட்டாளே!. அந்த இரவு அவனுக்கு அற்பதமானதாக இருந்தது. அவளை பார்த்து சிரித்தவாறு " பவி , நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் " என்றான். அவள் அவனை பார்த்து மெல்லிய புன்னகை பூத்தாள். கலையான அவன் முகமும் , சிரிப்பும், இனிமையான அவன் பேச்சும் அவளுக்கு ஆருதலை அளித்தது. " நான் என் மனதில் பட்டதை சொன்னேன். எல்லா பெண்களிடமும் நான் இப்படி சொல்வேன் என்று என்னை தவறாக நிணைக்காதே பவி! எப்போதும் உண்மை மட்டுமே சொல்வேன்". அவளும் அவனுடைய இளமை கொஞ்சும் அழகை கவனிக்காமல் இல்லை . மதன் என்ற தன் பெயருக்கு ஏற்றார் போல் ஆணுக்கான மிடுக்கோடு அவன் இருந்தான். கடலில் அவன் செய்த சாகசமும், அன்பான அவன் நடத்தையும், உதவி செய்யும் மனமும் அவளுக்கு அவன் மீது ஒரு நல்ல நம்பிக்கையை உணர செய்தது. விளையாட்டாக அவன் பேசுவதை கேட்டு மௌனமாக இருந்தாள்.
இருவரையும் அசதி வெகுவிரைவில் தொற்றிக்கொள்ள , கடற்கரையில் எப்போது உரங்கினோம் என்று தெரியாமல் உரங்கிப்போனாா்கள். பிரை நிலவும், நட்சத்திரங்களும், அந்த கடலும் அலையும் காற்றும் ஓயாது , தூங்கும் அவர்களுக்கு துணையாக இருந்தன. விடி வெள்ளி கடல்வானில் மெல்ல தோன்ற , தன் அடுத்த நாளுக்காக ஆயத்தமானது பூமி. புதிதாக பிறந்த குழந்தை போல் , தன் சிவந்த கதிர்கள் இளமஞ்சள் மேனி எங்கும் உதிக்க , கிழக்கு வானத்தில் சூரியன் மெல்ல எழுந்தது. அந்த காலை வேளை கதிர்கள் உறங்கிக் கொண்டிருந்த பவியை எழுப்பியது. எழுந்தவள் , ஈரம் காய்ந்த அவள் முன்பு அணிந்திருந்த ரணுவ ஆடையை போட்டுக்கொண்டாள். பின்பு படகில் இருந்த அவளுடைய பையில் கைமின்விளக்கு, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை போட்டுக்கொண்டு அதையும் தன் முதுகில் மாட்டிக்கொண்டாள். படகின் அடியில் இருந்த அவள் காலணியை தேடி போட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் மதனை பார்த்தாள். அவனை எழுப்பாமல் , அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் மெல்ல கடற்கரை வழியே நடக்கத்தொடங்கினாள்.
to be continued ...
Please visit tamilnovelofsrikavi.blogspot.in
For next chapters
Please give like and share...