நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 10




" ஹலோ மிஸ் பவி!! இது என்ன கெட்ட பழக்கம்??!" என்ற மதனின் குறள் கேட்டு நின்றவள், திரும்பி பார்த்தாள். " சொல்லிக்கொள்ளாமல் போவது கெட்ட பழக்கம் தெரியாதா? எனக்கு அது பிடிக்காது" என்றான். " நீ எங்கு வேண்டும் என்றாலும் போ , ஆனால் முதலில் நீ குளித்து , சாப்பிட்டுவிட்டு பிறகு போகலாம், ஒன்றும் ஆகிவிடாது. அதோ அந்த மாந்தோப்பில் தான் என் பீச் ரெசாட் பிரைவேட் கேபின் இருக்கிறது. வா பவி , இந்த ஒட்டிய மண்ணெல்லாம் குளித்தால் தான் போகும். இதனுடன் நீ பயணம் செய்ய முடியாது" என்றான். அவளுக்கும் அவள் அப்போது இருந்த நிலை பிடிக்க வில்லை. கடல் மண் உடலெங்கும் நெருடலாக இருந்தது.
மதன் அவளிடம் பதில் எதிர் பார்க்காது திரும்பி தோப்பை நோக்கி நட ந்தான். பவி அவனை பின் தொடர்ந்தாள்.

விடியல் தந்த அந்த இதமான இளஞ்சூட்டை உணர்ந்த மதன் நடந்தவை எல்லாம் கனவுபோல் அவன் நிணைவில் நிழலாட கண்விழித்தான். அவன் அருகே பவி உறங்கிக்கொண்டிருந்தாள். அந்த வெளிச்சத்தில் பளிச்சிட்ட அவள் அழகை கண்ட அவன் மனம் துள்ளியது. அதே நேரம் அவளும் தன் உரக்கம் களைந்து எழுந்தாள். 
அவள் ஆடையை அணிந்து பையை எடுத்துக்கொண்டு தயாராவதை தூங்குவது போல் , ஆனால் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் மதன். அவள் எப்படியும் தன்னிடம் சொல்லிவிட்டு , மெயின் ரோட்டில் உள்ள ஏதாவது ஹோட்டலுக்கு செல்வாள் என எதிர்பார்த்தான். ஆனால் அவள் மாறாக , ஏதும் சொல்லிக்கொள்ளாமல் கடற்கரை வழியே செல்ல தொடங்கியதை பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால் அந்த வழியே செல்வது தற்கொலைக்கு சமம். கடற்கரை , வனப்பகுதியில் முடியும். அதன் பிறகு வேறு பாதையில்லை. வசதியான வீட்டுப்பெண் போல் இருக்கும் அவள் , முட்டாள் தனமாக இருக்கின்றாளே என்று நிணைத்தான். எனவே அவளை தடுத்து அவன் காட்டேஜ் கூட்டிச்செல்ல முடிவு செய்தான். 

இருவரும் , மாந்தோப்பின் தனியான காட்டேஜை அடைந்தனா். அவளை, குளிர் வசதி செய்யபட்ட தன் படுக்கையரையில் அமர சொல்லி விட்டு அவன் முதலில் குளித்துவர சென்றான். பவி அதுவரை தொலைக்காட்சி பார்க்கட்டும் என்று அதில் பாடல்களை ஒலிக்கச் செய்து விட்டுச் சென்றான். அவள் சோகம் தோய்ந்த முகத்துடன் எதிலும் பற்றில்லாமல் இருந்தாள். விரைவில் மதன் , குளித்து ஒரு வெள்ளை டீ சர்ட், கருப்பு பான்ட் அணிந்து புது மாப்பிள்ளை போல் வந்து நின்றான். அவளுக்கும் அதே போல் ஒரு ஆடையை தந்து குளித்து வர சொன்னான். அவள் சென்ற பிறகு , அன்றய செய்திகளை தெரிந்து கொள்ள சேனல் மாற்றினான். தொலைக்காட்ச்சியில் பரபரப்பாக அபபோது வெளிவந்தபடி இருந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தான்

பவி, குளித்து விட்டு வரும் சத்தம் கேட்டு, தொலைக்காட்சியை ஆப் செய்தான். பவி தலைகுளித்து அவனுடைய ஆடையை அணிந்துக்கொண்டு கமகமக்க வந்தாள். அவளை உடனே தடுத்தவன். " நேற்று கப்பலில் என்ன நடந்தது. உன்மையை சொல்!! நீ யார் ?!! நேற்று இரவு இராணுவ கப்பலில் குண்டு வெடிப்பு நடந்திருக்கின்றது. புரட்ச்சி படையினர் , ராணுவகாவலர்கள் போல் வேடம்போட்டு கப்பலுக்கு குண்டு வைத்திருக்கிறார்கள். நீயும் புரட்ச்சிப்படையை சேர்ந்தவள் தானே, பவி?? " என்று மிரட்டல் தோனியில் கேட்டான்.

அதிர்ச்சியில் உரைந்த பவி , " கப்பலில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அதற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புரட்ச்சிப்படையினர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது , என்னை நம்பு மதன். கப்பலில் பார்ட்டி நடந்துக்கொண்டிருந்த நேரத்தில் தீடீர் என்று துப்பாக்கி தாக்குதல் நடந்தது. அதில் இருந்து படகில் நான் மட்டுமே தப்பித்தேன். படகில் தப்பி சிறிது தூரம் நான் வரவும், கப்பலில் குண்டு வெடித்தது. அதன் பிறகு தான் நீ என்னை காப்பாற்றினாய்" என்று அழுதுக்கொண்டே கூறினாள். " உன்மையில் அப்படி இருந்தால் , இப்போதே வா பவி, ராணுவ மையத்திற்க்கு சென்று நடந்தவற்றை கூறி விடலாம் " என்றான் மதன். " அது முடியாது , என்னை இப்படியே விட்டுவிடு மதன்" என்று அங்கிருந்து புறப்பட பார்த்தாள் பவி. அப்போது அந்த அறைக் கதவு வெளியில் இருந்து உடைக்கப்படுவதை பார்த்து இருவரும் திடுக்கிட்டனா். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே முகமூடி அணிந்த ஒருவன் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தான். மதனை நோக்கி " அவளை என்னுடன் அனுப்பிவிடு, வீண் பிரச்சனை வேண்டாம் " என்று கத்தினான். பின் துப்பாக்கி முனையில் பவியை இழுத்துச் சென்றான்.

to be continued ...
Please visit tamilnovelofsrikavi.blogspot.in

Please like and share
...

எழுதியவர் : sri (12-Nov-17, 2:22 pm)
சேர்த்தது : srikavi 110
பார்வை : 181

மேலே