அரசியல் -- திராவிட கட்சிகளின் பரம்பரை சொத்தா

தமிழகத்தில் அரசியல் என்பது திராவிட கட்சிகளின் பரம்பரை சொத்தா?
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் திரு கமலஹாசன் அவர்களும் திரு ரஜினி காந்த் அவர்களும் அரசியல் கட்சி துவங்குவது பற்றியும் அரசியல் பிரவேசம் பற்றியும் பேசி வருகின்றனர்
இது என்னவோ இமாலய தவறு போலவும் திரு கமலஹாசன் திரு ரஜினி காந்த் அவர்களும் அரசியல் பற்றி பேச அருகதை அற்றவர்கள் போலவும் அவர்கள் அரசியல் கட்சி துவங்குவதால் தமிழகமே அழிந்து விடும் என்பது போலவும் திராவிடக்கட்சிகளின் பிரமுகர்கள் சிலர் பேசி வருகின்றனர் இதை ஊடகங்களும் ஊதி ஊதி பெரிதாக்கி வருகின்றன
ஒவ்வொரு குடிமகனுக்கும் தனக்கென கொள்கைகள் வகுத்துக்கொள்வதற்கும் தன் கொள்கைகளை வெளிப்படுத்துவதற்கும்
தானிருக்கும் நாட்டில் அல்லது பகுதியில் மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கும் அவற்றை ஆய்வு செய்வதற்கும் உரிமை உள்ளது ஆனால் இங்கு சில திராவிட கட்சிகளின் சில பிரமுகர்கள் அந்த நடிகர்களின் நோக்கத்தை சிதைத்து அவற்றுக்கு களங்கம் கர்ப்பிப்பது போல பேசி வருகின்றன
என் நடிகர்களுக்கு சமூக அக்கறை இருக்க கூடாதா ? அவர்கள் அவற்றை வெளிப்படுத்தக்கூடாதா ? ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கூட திரைப்பட நடிகர்கள் நடிகைகள் சுதந்திர போராட்டம் பற்றி தன் நடிப்பிலும் பாட்டிலும் வெளிப்படுத்தவில்லையா ? அப்போதிருந்த ஆங்கிலேய அரசாங்கம் தடை செய்தாலும் அவற்றுக்கு முழுமையாக முட்டுக்கட்டை போடவில்லையே
அனால் இன்றோ ரஜினி காந்த் கமலஹாசன் அவர்களின் சமூகம் சார்ந்த கருத்துக்களுக்கு வித விதமாய் சாயம் பூசி அவர்களை ஏதோ சமூக விரோத செயல்கள் புரிந்தவர்கள் போல சாடுவதும் தூற்றுவதும் மிகவும் வேடிக்கை
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் வந்து விட்டு போகட்டும் அவர்களை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் மக்களாகிய எங்கள் கைகளில் இருக்கிறது ஆனால் அவர்களை அரசியல் பேசக்கூடாது என்பதும் அவர்களின் சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளியிடக்கூடாதென்பதும்
ஏற்க தக்க ஒன்றல்ல
திரைப்பட நடிகர்கள் இந்திய பிரஜைகள் தானே அவர்களுக்கு இங்கு ஓட்டுரிமை இருப்பது போல கருத்துக்களை வெளியிடும் உரிமை அரசியல் பங்கேற்கும் உரிமை கொள்கைகளின் அடிப்படையில் கட்சியை தொடங்கும் உரிமை அவர்களுக்கும் உண்டல்லவா ? அப்படியிருக்க என் இந்த ஆர்ப்பாட்டம் அலம்பல் எல்லாம் எங்கே இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்து விட்டால் தங்களுடைய வண்டவாளங்கள் வெளிவந்து விடும் என்ற பயமா ? இல்லை தங்கள் பதவி சிம்மாசனம் பறிபோய்விடும் என்ற அச்சமா ?
அரசியல் ஒன்றும் திராவிட கட்சிகளுக்கோ அல்லது மற்றக்கட்சிகளுக்கோ பரம்பரை சொத்தல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும் மக்கள் நலன் ஒன்றே முக்கியம் அல்லவா? ஓர் கணம் சிந்திப்பீர்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (12-Nov-17, 9:25 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 178

சிறந்த கட்டுரைகள்

மேலே