என் ராஜ்ஜியம் அவள்
![](https://eluthu.com/images/loading.gif)
தென்றலின் வாசனை
அவளிடம் காணலாம்
சூரியனின் குளிர்ச்சியை
அவள்காதலில் உணரலாம்
காவியம் பேசும்
காதல் கண்கள் அவள்
செவ்வானத்தின் சிறுதுளி எடுத்து
செந்தூரம் வைப்பாள்
சிந்தாமல் சிதறாமல் காதல்
முத்தம் அள்ளிக் கொடுப்பாள்
அழகாய் மனம் பேசும்
அல்லித்தோட்டத்து பூக்கள் அவள்
விழுங்கும் பார்வையில் இருப்பாள்
விழியால் விதிகள் படைப்பாள்
நடுவகிடில் நடுநிசி நிலவு அவள்
புடவையில் நிகழ்கால அரசி அவள்
நெற்றிப் பொட்டின் அழகில்
கோபுர கம்மல்கள் ஆடும்
ராகம் பாடுபவள் அவள்
ஜீவன் தேடுபவள் அவள்
என் ராஜ்ஜியம் அவள்