குழந்தைகள் தினம் - 2017

இனிய குழந்தைகள் தின
நல்வாழ்த்துக்கள்
குழந்தையும் தெய்வமும்
அனைத்திலும் ஒன்று...

நேரு மாமா போற்றிய
மாபெரும் சக்திகள்
குழந்தைகள்...

இந்த குழந்தை
விதைகளை
பண்படுத்தப்பட்ட
செம்மண்ணிலே
விதையுங்கள்
நாளைய பாரதத்திற்கு
நிழல் கொடுத்து
தாங்கிபிடிக்கும்
வலிமை மிக்க
விருட்சங்கள் இவர்கள்...

கள்ளிப்பாலுக்கு
இரையாக்காமல்
கல்வி கொடுங்கள்
நாளைய பாரதத்தின்
தூண்கள் இவர்கள்...

குழந்தை தொழிளார்களை
ஊக்கப்படுத்தாதீர்கள்
இன்று கல்வி கொடுத்தால்
நாளைய பாரதத்தின்
மிகச்சிறந்த தொழிலதிபர்கள்
இவர்கள்...

குழந்தைகளை
கனவு காணவிடுங்கள்
நாளைய அப்துல் கலாம்
நாளைய அன்னை தெரெசா
நாளைய விவேகானந்தர்
நாளைய நபிகள் நாயகம்
இன்றைய பிஞ்சுகள்
என்பதை மறவாதீர்கள்...

பெண் குழந்தைகளை
தெய்வமாக பாவியுங்கள்
இன்னல் கொடுக்காதீர்கள்
பிஞ்சு மனதிலே
நஞ்சு கலக்காதீர்கள்...

குழந்தைகள்
பட்டாம்பூச்சிகள்
போல் சுறுசுறுப்பானவர்கள்
அவர்களின் எண்ணத்திற்கு
மதிப்பு கொடுங்கள்...

இன்றே வலிமையான
குழந்தை சமுதாயத்தை
உருவாக்குவோம்
நாளைய பாரதம் தானாகவே
வலிமையாகி வல்லரசாகிவிடும்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (14-Nov-17, 11:51 am)
பார்வை : 2811

மேலே