தேடல்

முப்பது ஆண்டுகளின் ஒவ்வொரு
மழையிலும் தேடுகிறேன்
என் உயிர் தாகம் தீர்க்கும் ஒரு
மழைத் துளியையும்
என் உயிர் எடுக்கும் ஒரு
மழைத் துளியையும்
ஆனால் தேடல் தோல்வியை
நகையாடும் துளி மட்டுமே
கை சேர்கிறது!!!

எழுதியவர் : (14-Nov-17, 11:58 am)
சேர்த்தது : Karthikeyan
Tanglish : thedal
பார்வை : 257

மேலே