காதல்

காதல் என்பது ஒரு
'இன்ப விபத்து'
எதேர்ச்சையாய் வருவது
அதை தேடி செல்லாமல்
கூட சிலருக்கு
தானே தேடி வருவது

காதலைப் பற்றி
எண்ணி எண்ணி
கற்பனையில் வாழ்ந்திடலாம்
பகர்க் கனவு கூட காணலாம்
ஆனால் ஒருபோதும் காதல்
உருட்டல் மிரட்டலால்
கனிந்திடாது ஏனெனில்
அது மனதில் தானாக
ஒருவருக்கு இடம்
கொடுத்திடும் உறவு
மனதில் புகுந்தவரோ
அம்மனதிற்க்கே அக்கணமே
சொந்தக்காரர் ஆகிவிடுவார்

காதலியை தேடி அலைந்து
பெண்ணொருத்தியைக் கண்டு
ஒரு முகமாய் அவள் மீது
காதல் கொண்டு - முடிவில்
அவளுக்கோ உன் மீது
அப்படியோர் உணர்வில்லை
என்றறிந்தும் அவளுக்கு
தொல்லை தருவது
மூளை சரியில்லா பித்தன்
செய்யும் ஒவ்வாத வேலை
காதல் ஒரு போதும்
வன்மையால் அடைய முடியா
இருதய பூர்வமான உறவு !
அது தானாக கனிந்து வந்தால்
கற்பகத்தரு தந்த வரப்பிரசாதம்
எல்லோரும் அதிருஷ்டசாலிகள்
என்று இருப்பின் 'அதிருஷ்டம்'
எப்படி அறிய பொருளாகும்?
காதலும் அது போல
சிலரை தானாக வந்தடையும்

காதலை கற்பிக்க
பள்ளிகள் ஏதும் இல்லை
காதலை வாங்க கடைகளும் இல்லை
தானாக கனிந்து வரும் உறவு அது
காத்திருந்து ப்ரயோஜம் இல்லை
வரும்போது நீயோ இன்பத்தின்
உச்சக்கட்டத்தில் அப்படியொரு
உன்னத உறவு அது!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Nov-17, 2:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 153

மேலே