எவனோ ஒருவன் வாசிக்கிறான்

நீ போகும் வழி-லி-யில் நான்.
``````````````````````````````````````
இருபத்தேழு ஆண்டுகளின் பின்
என் இதயம் நனைத்த ஓர் உயிர் நீ,
நான் நானாக இருந்ததை விட
நீயாக இருந்த பொழுதுகள்தான் அதிகம்,,,

என்னோடு வாழப்பிறந்தாய் நீ வாழ்ந்தேன்,
இன்பத்தை கருவாக்கினாய்
உன் நினைவுகள் இன்னும்
உயிரோடுதான் உள்ளது என் உயிராக,

அலைகளைப்போல் ஓயாமல்
முத்தமிட்டுக்கொண்டோம் நம் காதலாலே
போதாதென்ற மனத்தோடுதான்
பெற்றுக்கொண்டேன் உன்
கோபம் கலந்த வார்த்தைகளை
நீ கொடுக்கும் நேரமெல்லாம்,

இப்போதெல்லாம் என் -
நிழலையே நான் வெறுக்கிறேன்
காலம் கவலைகளை மட்டும்
என்னுள் பிறப்பித்ததை எண்ணி,

விதியின் விளையாட்டில் உன்-
நினைவுகளுக்கு நான் இறையாகிக்கிடப்பதிலும்
பெருமை கொள்கிறேன்,

கல் நெஞ்சும் கரைந்து போகும் காலமிது
உன்னில் நான் காதலாய்த்தான்
பிறந்திருக்கிறேன் தொலைத்துவிடாதே,

நாம் வாழ்ந்த நொடிகள்
உன் வாழ்க்கைக்குத்தடையாக இருந்தால்
நீ போகும் வழியில் உதறிவிட்டுப்போ,

என்னை நீ வெறுப்பதை விட
எரிப்பதே மேலானது........

- எவனோ ஒருவன் வாசிக்கிறான் -

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (15-Nov-17, 7:26 pm)
பார்வை : 312

சிறந்த கவிதைகள்

மேலே