சுவாசம் தேடும் இதயம்!!!
உன் முகம் நான் பார்த்ததில்லை
உன் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை
எழுத்துக்களினூடே உன் அறிமுகம்
ஒலி அலைகளில் உன் தரிசனம்
உன்னுடன் பேசும் ஒரு நொடிக்காய்
நாள் முழுதும் அலை பாயும் என் எண்ணம் .
உன் செல்லச்சண்டைகளை
மழலைகுறும்பாய் எண்ணி
மௌனச்சிரிப்புடன் குதுகலிக்கும்
என் மனம்.
என் மூச்சை உள் இழுக்கும் போதெல்லாம்
தேடுகிறேன் உன் மூச்சை
காற்றிற்கு வேலி இல்லை அல்லவா
அதனால் நீ விடும் மூச்சும் என்றாவது ஒரு நாள்
என்னை தீண்டும் என்ற
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .
சுவாசம் இருந்தும்
சுவாசிக்க மறந்த இதயமாய் ! ………