வேண்டும் நீ அதை மட்டுமே வேண்டும் நான்

உன்னோடு இருக்கும் வரை கருவறையின் வாசம் உணர்ந்தேன் உன் பாசத்தில்
உன்னை இழந்த பின்பு கல்லறையின் வாசம் உணர்கிறேன் உன் இழந்த ஏக்கத்தில்
இறைவா இவள் மரணத்தை மறு பரிசீலனை செய் ஏன் நாட்கள் நலமாக இல்லை
என் அன்னை இல்லாது இனி ஒரு நொடியும் செல்லாது .
வலிகளே பழகிவிட்டது இதுவரை என்னை செதுக்கிய உளியும் மழுங்கி விட்டது
நீ இல்லாத பூமி மேல் நான் மட்டும் என்ன செய்வது
உன்னை தேடி மண்ணுக்குள் ஒரு தேடல் பயணம் மரணம் என்ற பாதையில் .



வேண்டும் நீ அதை மட்டுமே இன்றுவரை வேண்டும் நான்

எழுதியவர் : ராஜேஷ் (16-Nov-17, 7:40 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 86

மேலே