திருடுவதற்கு துணிவில்லை

வறுமையின் வளமை...
வாழ்ந்துவிட வைராக்கியம்...

திருடுவதற்கு துணிவில்லை...!
ஏமாற்றுவதற்கு எண்ணமில்லை...!
வேலை தேட படிப்பில்லை...!

பிள்ளைகளை பசியோடு,
வளர்த்திட நெஞ்சமில்லை...!

தேடித் தேடி அலைந்த,
இடங்களில் வேலையில்லை...!

பைபாஸ் சாலையில்...
இரண்டு நிமிடம் நிற்கும்,
நான்கு சக்கர பேருந்துகள்...
என்னை வரவேற்றது...

சன்னலோரம் அமர்ந்தவர்களிடம்,
எந்தன் குரல் கணத்தது...!

அம்மா கடலை... கடலை....
பத்துரூபா... பத்துரூபாமா....

பல நேரங்களில்,
பேருந்துக்குள்ளேயும் வியாபாரம்...!

நடத்துனரின் கண்டிப்புகளுக்கிடையே
சில நொடி வியாபாரம்...!!

காசு வாங்கி இறங்குவதற்கு
பேருந்தை நகர்த்தும் ஓட்டுனர்...!

அவசரத்தில் குதிக்கும்,
அறிவுக்கு தெரிவதில்லை...!
பின் தொடரும் வாகனங்கள்......
சிதைத்து வருகிறது
உடலின் பல பாகங்கள்.....
பல சமையம் உயிர்கூட..... – இருந்தும்
தொடர்கிறோம் தொழிலை

உயிரை பணயம் வைத்து...!!!

written by JERRY

எழுதியவர் : ஜெர்ரி (16-Nov-17, 9:00 pm)
பார்வை : 608

மேலே