கல்நெஞ்சக்காரி

சந்தம் சிந்தும் உந்தன்

விந்தை விழியால் தஞ்சம்

அடைந்ததடி நெஞ்சம்.....

கொஞ்சம்கூட நெஞ்சம் திறவாமல்

நித்தம் புரிகிறாய் வஞ்சம்....

சாந்தம் சொல்லும் சாமாதான

பார்வையால் எண்ணிவைக்கிறேன்

லஞ்சம்......

எதற்கும் இசையா உன் இதயம்

இமயத்தையும் மிஞ்சும்.....

ம்ம்ம்ம்....

இப்பொழுது புரிகிறது.....
.
.
.
.
.
.
.
"கல்நெஞ்சக்காரி".............

எழுதியவர் : விஜய காமராஜ் (17-Nov-17, 7:04 pm)
சேர்த்தது : விமுகா
பார்வை : 105

மேலே