சின்ன சின்ன ஆசை

சின்னச்சின்ன ஆசை,
அழகிய சிற்பமாக ஆசை!
வண்ண வண்ண ஆசை,
அன்னப்பறவையாக ஆசை!
புல்லாங்குழல் இசையில்,
பாட்டுப்பாட ஆசை!
தேனை விட இனிய
தமிழ்ச்சொற்களாக ஆசை......

சூரியனின் நெருப்பை
அணைத்துவிட ஆசை!!
நிலவுதனின் அழகை
மிஞ்சிவிட ஆசை!
விண்மீன்களைப் போல
பிரதிபலிக்க ஆசை!
பூக்களைப் போன்று
சிரித்தே இருக்க ஆசை!
மழைதனில் கொஞ்சம்
கரைந்துப் போக ஆசை....

சின்னச்சின்ன ஆசை,
அழகிய சிற்பமாக ஆசை!
வண்ண வண்ண ஆசை,
அன்னப்பறவையாக ஆசை!
புல்லாங்குழல் இசையில்,
பாட்டுப்பாட ஆசை!
தேனை விட இனிய
தமிழ்ச்சொற்களாக ஆசை......

மழலையாக மாறி
கவலை மறக்க ஆசை!
பார்க்கும் திசையெல்லாம்,
பாசம் உணர ஆசை!
கலைகளையெல்லாம்
கற்றுணர ஆசை!
பாரதியைக் கண்டு,
மணந்துக் கொள்ள ஆசை!
அவன் தமிழ்தனில் என்னை
மறந்து விட ஆசை......

சின்னச் சின்ன ஆசை,
அழகிய சிற்பமாக ஆசை!
வண்ண வண்ண ஆசை,
அன்னப்பறவையாக ஆசை!
புல்லாங்குழல் இசையில்,
பாட்டுப்பாட ஆசை!
தேனை விட இனிய
தமிழ்ச்சொற்களாக ஆசை......


********************************************
என்னுடைய இரண்டாவது பாடல்...
படம் பெயர்: ரோஜா
பாடல் : சின்ன சின்ன ஆசை........ (இப்பாட்டின் இசைக்கு,நான் ஒரு பாடல் எழுதியுள்ளேன்.)

பாடல் பற்றிய கருத்தை முடிந்தால் பகிரவும்,எனது நட்புகளே.!!!

எழுதியவர் : பானுமதி (17-Nov-17, 10:23 pm)
சேர்த்தது : மதி
Tanglish : sinna sinna aasai
பார்வை : 665

மேலே