வெள்ளை தாள் மனசு

வெள்ளைத் தாளாய்

இருந்ததென் மனது!

ஓவியமோ காவியமோ

படைபாயென

எதிர்பார்த்திருந்தேன்!

வெள்ளைத் தாளில்

கிறுக்கிவிட்டுப் போனாய்!

கிறுக்கல்களே காவியமென

கிறுக்கமாய் இருந்தேன்!

மீண்டும் வந்தாய்!

கிறுக்கல்களைக் கூட

அழித்துவிட்டுப் போனாய்!

மீண்டும் வெள்ளைத் தாளாய்

என் மனது!

நீ

எப்போது கிறுக்குவாய்

என்றெதிர்பார்த்து………..

எழுதியவர் : சஜா (17-Nov-17, 8:01 pm)
சேர்த்தது : சஜா
பார்வை : 191

மேலே