அவர் என் உயிர்
அவரை இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தேன்...
அவரும் என்னை அணைத்துக் கொண்டார்...
காற்று புகாதபடி அணைத்துக் கொண்டோம்...
என்னோடு வாழ சம்மதமா...
இல்லை
உன்னுடனே வாழ்ந்து
உன்னோடு சாகச் சம்மதம்...
ஹா ஹா...
ஹா ஹா...
வா தேன்நிலவு போகலாம்...
என்று கையை கோர்த்துக் கொண்டார்...
ஆமாம் இது ஆறாவது தேன்நிலவா...
கணக்கு ல புலிதான்டி
நீ ?
ஹா ஹா...
ஏழாவது தேன்நிலவு...
என்னை செல்லமாக அடித்து விளையாடி என் மார்பில் சாய்ந்தாள்...
சிறிது நேரம் கழித்து
அவள் சுவாசிக்க சிரமபடுகிறாள்...என்பதை உணர்ந்து
அவள் கையை இறுக்கமாக கோர்த்து
தளர்ந்த அணைப்பை இறுக்கி அணைத்துக் கொண்டு அமர்ந்து மடியில் அவளை போட்டுக் கொண்டேன்.
கை கால்கள் தன் கட்டுப்பாட்டை இழந்து துடிக்க
உடல் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டே இருக்கிறது.அவள் என்னை பிடித்தபடி எழும்பி நெற்றியில் முத்தம் பதித்தாள்.
ஹா ஹா பயந்து விட்டீர்களா என்று சிரித்து நடிக்க ஆரம்பித்துவிட்டாள்...
நாங்கள் இருந்த இடத்தில் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு ரவுடியை கொல்ல
போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் அவன் நகர்ந்து விட குண்டு அவரையும் என்னையும் சுட்டது.
அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஓடி வர ஓர் நொடியில் அனைத்தும் முடிந்தது.
ஒருவரை ஒருவர் பார்த்தபடி அணைப்போடு கைக்கோர்த்தபடி அவர் சரிய அவரோடு அவரை கட்டி பிடித்தபடி இறந்தேன்.
என்னையும் அவரையும் பிரித்து விடாதீர்கள்.
என்று கூறியபடியே முந்தானையால் என்னையும் அவளையும் இணைத்து இறுக்கி கட்டிவிட்டாள்.
எங்களை ஒன்றாக அடக்கம் செய்யுங்கள் என்று சொல்லி என் மார்பில் ஒரேயடியாக உறங்கிவிட்டாள்.
அவளை அணைத்தபடி
முத்தமிட்டு அவளோடு கைகோர்த்து அவளை பார்த்து சிரித்தபடி
இருவரும் ஒரே நேரத்தில் இறந்து விட்டோம்...
அவர் என் உயிர்...
அவள் என் சுவாசம்...
~ பிரபாவதி வீரமுத்து