என் ஜீவன்
வாச மரிக்கொழுந்தே
வெள்ளந்தி பூச்சரமே
மாமன் மடிசாய இந்த
மன்னவன் தோள்சாய
கம்பன் வரியெடுத்து
கவிப்பாடி வந்தவளே
என் மன ஆழியில்
காதல் முத்து குளித்தவளே
கண்தூங்கும் நேரத்திலும்
என் நினைவை நீங்காதவளே
உனை நீங்கி
என் ஜீவன் வாழுமோ
நீ இல்லாமல் அது
கண்மூடி தூங்குமோ...