நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 35
![](https://eluthu.com/images/loading.gif)
chapter : 35
" கோபி, என்னை மன்னித்துவிடு. என்னால் உன்னை சந்திக்க முடியாது. எனக்காக காத்திருக்க வேண்டாம்"....விஜி மதனுக்காக அனுப்பிய கடைசி குருஞ்செய்தி , அவன் நிணைவுகளில் நிழலாடியது. அவளுடன் கழித்த தன் காதல் நிணைவுகளை புறந்தள்ளிவிட்டு , அந்த அழைப்பை ஏற்றான் மதன், " ஹலோ விஜி " என்றான் செயற்கையான உற்சாகத்துடன். " கோபி, எப்படி இருக்கே ??! உன்னை தொடர்பு கொள்ள நான் பல முறை முயற்ச்சி செய்தேன். ஆனால் பதில் இல்லை. எங்க இருக்கே ??! " அவள் கவலை அவள் குறளில் தெரிந்தது. " நான் நல்லா தான் இருக்கேன். நீ தான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாய் . அதனால் நான் மட்டும் தீவுக்கு வந்து விட்டேன்" என்றான். " பொருப்பில்லாமல் பேசாதே கோபி, உன் வீட்டில் கூட சொல்லிக்கொள்ளாமல் ஏன் இப்படி தனியான தீவுக்கு சென்றாய். முதலில் அங்கிருந்து வீட்டுக்கு போ". " நீ வரேன்னு சொல்லு விஜி நான் உன் கையை பிடிச்சிட்டு நீ எங்க கூப்பிடுகிறாயோ நான் அங்க வரேன்" கோபி அவனையும் மீறி அவளிடம் கரைந்தான். " நான் எவ்வளவு சொல்லியும் நீ இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் எப்படி??! என்னால் லண்டனை விட்டு வர முடியாது . என்னுடைய மருத்துவ மேற்படிப்பு முடிந்ததும் , நான் லண்டனிலேயே இருக்க முடிவு செய்துவிட்டேன். உன்னை இதற்க்கு மேலும் காத்திருக்க வைத்து கஷ்டம் கொடுக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்ச்சி செய் கோபி. வீட்டுக்கு உடனே போ" என்றாள். மதன் எதிர்பார்த்த பதில். ஆனால் அவன் மனம் அந்த பதிலை ஏற்று கொள்ள மறுத்தது. " சரி விஜி , நீயும் பத்திரமாயிரு. வீடு வந்த பிறகு நான் பேசுகிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான். ஒரு விரக்தியுடன் குடிசைக்கு வந்து சிமியை பார்த்தான். " நீ சொந்தமா ஆட் கம்பனி வச்சிருக்கியா ?? " சிமி, அவள் கையில் இருந்த அடையாள அட்டையை காட்டி கேட்டாள். " "அதான் எல்லா பதிலும் அதில் இருக்கே . ம்ம்ம் ஆமா, அதை கொடு " என்று அவன் பர்ஸை அவளிடம் இருந்து வாங்கி அவன் சட்டை பைக்குல் வைத்துக் கொண்டான்.
" அவங்க யாரு, உன் மனைவியா ?!" என்று கேட்ட சிமியை எரிச்சலோடு பார்த்தான் மதன். " சொல்லாவிட்டாலும் பரவாயில்லை " என்றவள் அமைதியாக கட்டிலில் அமா்ந்து கொண்டாள். " அவள் என் காதலி, விஜி " என்று தன் காதல் கதையை சிமிக்கு சொல்ல தொடங்கினான் மதன்.
பள்ளி படிப்பை முடித்து , பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வுக்காக தன்னை தயார் செய்து கொண்டு இருந்தான் மதன் கோபால்.
அப்போது தன் குடும்ப நெருங்கிய நண்பருடைய மகள் விஜி, மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வை அவன் வீட்டில் இருந்து பக்கத்தில் இருந்த கோச்சிங் வகுப்புகளுக்கு சென்று படிக்க ஒரு மாதம் வரை மதன் வீட்டில் தங்கினாள். விஜி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றும் , நுழைவுத்தேர்வில் சென்ற ஆண்டு சோபிக்கவில்லை. அதனால் இந்த முறை கடினமாக படித்து இந்த ஆண்டில் நிச்சயம் மருத்துவ படிப்பை பெற வேண்டும் என்று முழுமூச்சோடு படித்தாள். அவள் தந்தையின் பெரிய கனவு அது. மதனுக்கும் படிப்பில் உதவி செய்தாள். இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். அந்த ஆண்டில் இருவரும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தங்கள் கல்லூரி கனவை மகிழ்ச்சியாக தொடர்ந்தார்கள். விஜி மதனை விட ஒரு வயது மூத்தவளாய் இருந்தாலும் அவளை மதனுக்கு மிகவும் பிடித்தது. அவள் அவன் பேரில் எப்போதும் அக்கரையோடு இருந்தாள். அந்த ஆண்டு இருதியில் மதன் தன் காதலை விஜியிடம் சொல்லிவிட்டான். முதலில் தயங்கிய விஜி பின் அவளும் அவன் காதலை ஏற்றுவிட்டாள். இருவரும் அந்த ஐந்து ஆண்டுகள் இணைபிரியாத காதலர்களாக இருந்தனா். அவா்கள் முடிவை இருவர் குடும்பங்களும் ஏற்றுக்கொண்டது. மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற விஜியை வழியனுப்பி வைத்தான் மதன். அவனும் தன் சொந்த ஆட் கப்பனியை தொடங்கி பல சவால்களை கடந்து நல்ல முறையில் வளர்ச்சி கண்டான். விஜியையும் லண்டன் சென்று ஒரு முறை பார்த்து வந்தான். விஜியின் தந்தை அப்போது திடீர் என்று காலமானார். அதன் பிறகு தான் விஜியின் எண்ணத்தில் மாற்றம் நிகழ தொடங்கியது. தன் எதிர்காலத்திற்க்கு தான் லண்டனில் இருந்தால் தான் நல்லது என்ற முடிவை அவள் எடுத்துவிட்டாள்.
தன்னை அவள் விட்டு விலகுவாள் என்று நிணைத்து பார்க்காத மதனுக்கு அது பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. எப்படியும் அவளிடம் பேசி அவள் எண்ணத்தை மாற்ற முயற்ச்சி செய்தான்.
" பாப்ஸ், நீ பார்த்தால் அசந்து விடுவாய் , அப்படி ஒரு அழகிய தீவு பா . யாருமே இருக்க மாட்டாக. தனியா நமக்குனு ஒரு குட்டி வீடு. அந்த வீட்டில் எல்லா வசதியும் இருக்கு. அங்க தனியா நீயும் நானும் மட்டும். என் பாபாக்கு உம்மா , உம்மா முத்தம் கொடுத்துட்டே இருப்பேன். இச், இச், இச்.... " தன் கனவுகளை விஜியிடம் முத்தங்களுடன் போனில் சொல்லிக்கொண்டே போனான் மதன். " கோபி , ப்ளீஸ் எனக்கு இங்கு நிறைய வேலை இருக்கு. ஒரு வாரம் வரை விடுமுறை எல்லாம் எனக்கு கிடைக்காது. முடிந்த வரை முயற்ச்சி செய்கிறேன் " என்று சொன்னவள் பிறகு அவன் அழைப்பை ஏற்கவேயில்லை. கடைசியாக தான் வர போவதில்லை என்று மறுத்துவிட்டாள். தன் காதலுக்கு இனி அவள் வாழ்வில் இடமில்லை என்று அப்போது தான் மதனுக்கு விளங்கியது.
to be continued...