நினைவுப்பாதை

நினைவுப்பாதை

நினைவுப்பாதை – கட்டுரைப் போட்டிக்காக…
வாழ்க்கையின் நீளமே நினைவுகளின் நீளம்தான.; நினைப்பாதை எங்கே சரியாக ஆரம்பித்தது என்று இன்றும் நான் அவ்வப்போது தேடிப்பார்ப்பதுண்டு... ஆனால் அவை இன்னும் எனக்கு ஆகப்படவே இல்லை. நம் சிறுவயதின் நினைவுகளை பின்னோக்கி நகர்த்திக் கொண்டே சென்றால் அவை சட்டென்று ஒரு புள்ளியில் நின்றுபோய்விடுகின்றன. ஒருவேளை அங்கிருந்துதான் என் நினைவுப் பாதை துவங்கியிருக்க வேண்டும் என்ற நானே முடிவு செய்துகொள்வேன். ஆனால் எனக்குள் இன்னும் அந்தத் தேடுதல் குறையவில்லை. ஆனால் என் சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கும்போது பெரும்பாலும் அவை அழுத்தம் கொண்ட மனப்பதிவுகளிலிருந்தே துவங்கிஇருப்பதை அறியமுடிகின்றது. ஒன்று மிகையான மகிழ்வளித்த சம்பவங்களாக இருக்கின்றன அல்லது மிகையான வலி மற்றும் அவமானம் மற்றும் பிற உணர்வுகளைக் கொண்ட சம்பவங்களாக அவை நீளுகின்றன. தாய் தந்த முத்தம், தந்தையின் கண்டிப்பு, நண்பனின் கேலி, குரும்புத்தனத்தால் ஏற்பட்ட விபரீதங்கள் ஆசிரியர் தந்த தண்டணை பக்கத்து வீட்டுப் பெண்ணின் பார்வை தந்த பரிதவிப்பு என வயதின் வளர்ச்சிக்கேற்றவாறு அவை மாற்றம்பெறுகின்றன. அறிவை நுகர ஆரம்பித் பிறகு நம் சிந்தனையில் மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிக அழுத்தத்தோடு இடம் பெறுகின்றன. எது எப்படியிருப்பினும் இந்த நினைவுகள் இல்லை என்றால் வாழ்கை வெறுமையடைந்துவிடும் என்று நினைக்கிறபோது நினைவுகள் எவ்வளவு மதிப்புமிக்க பொக்கிஷங்கள் நமக்கு என்பதை நன்றாகவே உணரமுடிகிறது. ஆக எதைத் தொலைத்தாலும் மீட்டெடுக்கலாம் நினைவுகளை மட்டும் தொலைத்துவிடாதிருப்பது நல்லது. ஏனெனில் நிகழ்கால வாழ்க்கையை நடத்திச்செல்ல நிச்சயம் அவை நமக்கு நேர்மறையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ வழிகாட்டும் என்பதில் சந்தேகம் இல்லை..

எழுதியவர் : govindarajan (21-Nov-17, 2:00 pm)
பார்வை : 89

சிறந்த கட்டுரைகள்

மேலே