ஏன் இந்த மௌனம்

ஏன் இந்த மௌனம்!
☆☆☆☆☆☆☆☆☆☆☆
தனது படிப்புக்கு பொருத்தமான வேலை தேடி அயலூர் சென்ற குமார் அங்கும் வேலை கிடைக்காமல் இருக்க விரத்தியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்
அப்பொழுது அவன் தங்கை அண்ணா அண்ணா உமா அக்கா மருந்து அருந்தி விட்டாங்கள்.
எனக் கூறவும் சிறிதும் தாமதிக்காமல்
உமா வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவ்விடத்தில்
உறவினர்கள் ஊர் மக்களென உமா வீட்டை சூழ்ந்து இருக்க சிலர் நிறை குறைகளை பேசி கொண்டு இருக்க உள்ளே சென்ற குமாரின் கண்கள் உமாவை தேடியது.
எனினும் அவள் தென்படாதால் மௌனமானான் கண்களில் இருந்து நீர் கசிய அவளின் நினைவுகள் அலை பாயத்தொடங்கியது
குமார் ஏழை குடும்பத்தைச் சேந்தவன் அதனால் அவனுக்கு வெறுப்பு துன்பம் என்பது வாடிக்கையான ஒன்று
அதனால் தனிமையிலே பொழுதை பெரும்பாலும் போக்குவான்.
அன்று ஒரு நாள் வாழ்வை வெறுத்தவனை குளக்கரையில் நின்று தன்னிலே நொந்து புலம்பும் போது உமா
எதேச்சையாக கண்டு கொண்டாள்
(உமா வேறு யாரும் இல்லை குமாரின் வாழ்வை உயர்த்த என பிறந்தவள் )
அன்று இருந்து குமாரின் வாழ்வில் புது திருப்பங்கள் வளர தொடங்கியது இதனால் குமாருக்கு உமா மீது காதல் மலர அதை சொல்லாமல் தவிர்த்து வந்தான்.
நல்ல வேலையில் சேர்ந்து விட்டு அவளைக் கரம் பிடிப்போம் என்று இருந்தவன் இன்று தன்னுடைய உமா இன்னும் ஏன் மௌனமாக இருக்கிறாள் என நொந்த வண்ணம் அல்லோலப்பட்டான்.