யார் பேய் 2
என்ன டி!
நாளைக்கு உன்ன பாக்க வரேன் னு சொல்லிட்டு,ஒரு வாரம் ஆச்சி இன்னும் வரவில்லை!!! உன் பிறந்தநாள் னு உங்க அண்ணனுக்கு தெரியாதா?
என்றாள் அபர்ணாவின் தோழி
என்ன? கேட்ட.....எனக்கு என்ன தெரியும்
அவனை பார்த்து ஏழு வருசம்
ஆயிற்று டி!!!!!
அவன் அன்னைக்கு பேசாமா இருந்தாலே, நான் ஹாப்பியா இருந்து இருப்பேன், இப்படி என்ன! அழ வைக்குறதுல என்ன ஹாப்பியோ?அவனுக்கு என்று தோழியின் முகத்தை பார்க்காமல் மறு புறம் திரும்பி அழுது கொண்டே பேசினாள்.
சரி சரி வா ஸ்கூல் போலாம், என கண்களை துடைத்து கொண்டு தன் தோழியை அழைத்து தன்னுடைய பள்ளியை அடைந்தாள்.
அவளுடைய வகுப்பறைக்கு செல்ல,அங்கே யாரும் இல்லை, அதுவரை துணையாய் வந்த சித்ராவையும் காணவில்லை.......
ஒருகணம் பயந்து பயந்து சுற்று சுற்றி பார்த்தவளுக்கு.....!!!!!
அவள் பின்னால் இருந்து ஒரு குரல்
ஹாப்பி பர்த் டே டி என்றதும் திரும்பியவள், சற்றும் தாமதிக்காமல் ஓடி சென்று அவளது அண்ணனை ஓங்கி ஒரு அறை அறைந்தாள்,
அவள் சிரிக்கிறாளா இல்லை அழுகிறாளா என விஜய்க்கு தெரியவில்லை!!!!!
சிறு வயது முதலே அவள் மேல் அவனுக்கு அவ்வளவு ஈடுபாடு இருந்தது இல்லை! அவளை ஒரு தொல்லையாகவே கருதி வாந்தான்,
இப்போதும் அவனுக்குகொடைக்கானலில் உள்ள சிறிய குக் கிராமத்தில் வேலை மாற்றல் ஏற்பட்டுள்ளது, அங்கே சப்பாடு சரியாய் கிடைக்காது, இவளை சமைக்க பயன்படுத்திகொள்ளலாமே என்றே அழைக்க வந்திருக்கிறான்.
இருந்தும் அவனுக்கு அவனது தங்கை அவனை பார்த்து இவ்வளவு மகிழ்வாளா? இதயத்தின் ஓரத்தில் எங்கேயோ தங்கை என இருந்த சிறிய பாசம் நாம் இவளை பிரிச்சி வச்சி தப்பு பண்ணிவிட்டோமோ! என சிந்திக்க வைத்தது
பள்ளியில் அனைவருக்கும் சாக்லேட் கொடுத்து விட்டு, அவளுடைய TC மற்றும் அவளது உடமைகள் எல்லா வற்றையும் வாங்கிகொண்டு அண்ணனுடன் கிளம்பினாள்.
எனிமே எப்பவும் என்கூட இருக்கலாம் டி என காரை ஓட்ட தொடங்கினான்.
காரானது குறுகலான சாலையின் வழியே சென்று கொண்டிருக்க, சன்னல் வழியே பார்த்தபடி சிரித்தபடி வந்து கொண்டிருந்தாள்,
அவள் அவ்வாறே சிரித்து அண்ணனை பார்க்க திரும்ப! விக்ரம் தனது பைக்கில் அவளது காரை கடப்பதும் சரியாய் இருந்தது,
அவளுக்கு விக்ரம் மீது ஒரு வெறுப்பு உண்டு, இந்த முறை வெறுப்பு இல்லை, அவனை கடைசியாய் பார்த்து விடலாம் என கண்ணை ஒரு முறை சாலையின் கடைசி வரை சுழற்றி பார்த்தாள்!
அண்ணனிடம் ஏதோ கேட்க போக!
அவனின் பர்சை அவன் காரின் முனையில் வைத்திருப்பதை பார்த்து அதை திறந்து பார்த்தாள்,
அதில் ஒரு பொண்ணின் போட்டோ இருக்க! அதை எடுத்தாள்
எடுத்ததும் காரானது உடனே சடன் பிரேக் போட்டது போல் நின்று கிளம்பியது,
ஓட்ட தெரியாதா! என்றாள் நக்கலாக!
சாரி அண்ணணோட கார் கொஞ்சம் பழசு ஆகிடிச்சி, அதான் என்றான்
அந்த சடன் பிரேக்கில் அபர்ணா சீட்டில் இருந்து தவறி விழ பார்த்து சுதாகரித்து சமாளித்தாள்.
பார்த்து உட்கார்ந்துக்கோ! என அண்ணனிடம் கட்டளை வந்தது.
சரி என்று தலை ஆட்டி விட்டு போட்டோவை பார்த்தாள்.
கையில் இருந்த போட்டோவையும் காணவில்லை, அவள் உட்கார்ந்திருந்த சீட்டின் அடி வரை குனிந்து பார்த்தவள், போட்டோவை தொலைத்து விட்டதை என உணர்ந்தாள்.
அண்ணன் திட்டுவான் என அவனுக்கு தெரியாமல் வைத்துவிடுவோம், அதன் முன் அதில் என்னவெல்லாம் இருக்கு என பார்த்துவிட அவளுக்கு எற்பட்ட ஆவலால் அதை திரும்பவும் திறந்து பார்க்க!
அவள் எதில் இருந்து போட்டோவை எடுத்தாளோ அந்த இடத்திலேயே அந்த பெண்ணின் போட்டோ இருந்தது,