சாயந்திரச் சாலையில்
சாரலின் தூறலை
துளித் துளியாய்
கையில் ஏந்தினேன்
உள்ளங்கை நிறைந்தது
உள்ளமும் குளிர்ந்து !
சாலையில் வீசிய இளந் தென்றலை
இழுத்துப் போர்த்திக் கொண்டேன்
மற்றவர்களுக்கும் வேண்டும்.....
விடை வேண்டியது தென்றல்
பிரியா விடை கொடுத்தனுப்பினேன் !
பாதி கடந்த பின் திரும்பிப் பார்த்தேன்
மீதிக்கு அவளும் திரும்பிப் பார்த்தாள்
தொடரவோ விடை பெறவோ
நாங்கள் திகைத்து நின்றோம்
சாயந்திரச் சாலையில் !