திருமண சீராக வேண்டும்

திருமண சீராக வேண்டும்
மனதோடு பேசிடும் இருமனங்களின் சங்கமம்
சிலர் மனங்களில் பேசாது ஊமையாகிடும்
ஆயிரம் ஆண்டுகளாய் இட்ட பயிராய்
பலர் பார்வையில் கேள்வியாய் ஆகிடும்
கடைவீதி பொம்மைப் போல் நின்றிடும்
பெண் பார்த்திடும் படலமென்று ஆகிடும்
விலைப் பேசும் சந்தை போலவே
இவள் பெண்மைக்கு ஏலம் நடந்திடும்
இல்லாதவன் பெண்ணாக பிறந்து விட்டால்
குடிக்கும் அடிக்கும் மனை ஆகிடும்
கல்யாணம் அதற்காக ஏங்கவில்லை
பொன் நகைக் கேட்டு அடவாதமுமில்லை
மணவாளன் எவராயினும் கேள்வி இல்லை
நல்ல குணம் ஒன்றே போதுமென்று கூறிவைத்தேன்
பிடிவாதம் இதுவரையில் எதற்கும் இல்லை
என் அரணாகி அவனிருக்க வேண்டுமென்றேன்
மனையாளின் மனம் அறியும் என்னவனாய்
என் துணையாகி உடணிருந்தால் போதுமென்பேன்
பண்போடு குடி காக்கும் குலமகனாய்
தன் உறவோடு கூடி நாளும் வாழவேண்டும்
தன் பாதி இவளென்று ஏற்கவேண்டும்
மனைவியவள் மானம் காக்க வேண்டும்
எல்லாமும் அவனாகி இருக்க வேண்டும்
என் எல்லாமும் அவனாகி நிலைக்க வேண்டும்
சீரான அன்போடு வாழ வேண்டும்
அவன் பெரும் சீராக நானாக வேண்டும்