நிலா

ஆதவனும் வெட்கத்தால்
சிகப்பது...
உந்தன் தாவணி விலகலால் தானோ?
...............................
நீ பூந்தொட்டி கேட்டாய்
நானோ உனக்காக நாற்காலி
வாங்கிவந்தேன்...
இதிலும் பூதானே அமர போகிறது
..............................
நிலவுக்கு எனக்கும் என்ன வித்தியாசம் என்கின்றாய்...
அது அக்கா
நீ தங்கை என்கின்றேன் நான்
................................
நொடிக்கு நொடி
பூக்கும் பூ என்ன?
என்றேன்...
சிரிப்பு என்றாய்
தவறு உன்தன் சிரிப்பு
........................
நான் உனக்கு வாங்கிய பூவை
தோழி கேட்கிறாள்
தேவதைக்கு வாங்கிய பூ சிறு பெண்ணிற்கா?
என கைவிரிக்கிறேன் நான்
....................................
பிறந்தால்
நீ பிறந்ந
ஆந்நாளில் தான்
பிறந்திருக்க வேண்டும்
மெனக்கிடுகிறது
தியதிகள் (நாட்கள்)

எழுதியவர் : நவின் (22-Nov-17, 12:12 pm)
சேர்த்தது : Vijay Navin
Tanglish : nila
பார்வை : 197

மேலே