ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கூப்பிடு தொலைவில்
உலகம்
அலைபேசி !

இல்லை அன்று
இன்றைய அறிவியல்
வாய்ப்பில் இளையோர் !

அடங்கியது
உலகம்
அலைபேசிக்குள் !

அழிந்து விடுகின்றன
அலைபேசி மாற்றுகையில்
முக்கிய எண்கள் !

எழுந்துநின்று மாலையிடும் மணமகள்
அமர்ந்தபடி மாலையிடும் மணமகன்
அரங்கேற்றம் ஆணாதிக்கம் !

கூறிடுவர் யாரென்று
குரலை வைத்தே
பார்வையற்றோர் !

விலைவாசி ஏற்றம்
விலை வாசிக்கலாம்
வாங்க முடியாது ஏழை !

சகல வசதியுடன்
பணக்கார வீட்டில்
நாய் !

மனிதரை விட
பணத்தையே மதிக்கின்றனர்
உறவினர் !

ஆறு அறிவு குறைந்து
ஐந்தாகி விடுகின்றது
சிலருக்கு !

அடிமேல் அடி விழுந்தும்
திருந்தாதவர்கள்
மனித மிருகங்கள் !

பத்தும் செய்த பணம்
முடிவில் தருகிறது
சிறை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (25-Nov-17, 4:27 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 212

மேலே