மீண்டும் மீண்டும் மழை வேண்டும் வேண்டும் மழை
![](https://eluthu.com/images/loading.gif)
மீண்டும் மீண்டும்
மின்னல் வெட்டி
மெல்லிசை மழை மீட்டுது வானம்.
மேனி சிலிர்க்கும் குளிர் காற்று.
இலைகளில் மழைதுளி
இதயத்தில் உயிர் துளி
மலர்களின் வாசம்
மண் வாசம் வீசும்
சிந்திடும் துளி மழையில்
சேர்ந்திடும் குளிர் இசையும்...
அடைமழை ஓசை
ஆனந்த இசை
புது ராகம் பிறக்கும்...
~ பிரபாவதி வீரமுத்து