கந்து வட்டி
கடனுக்கு பணம் கொடுத்து
கனவையெல்லாம் பிடுங்கிகிட்டு
வெத்து காகிதத்தில் ரேகை கேட்டு வாங்கிகிட்டு
கணக்கு வழக்கு இல்லமால் வட்டி பல குட்டி போட்டு
கடைசியில் கையேந்த விட்டுடுமே
காலனெனும் கந்து வட்டி .
அளந்தெரியாம இறங்கிப்புட்டு
அவசர அவசியத்தில்
அகல கால வச்சிடாத!!
அறிவை நீயும் இழந்திடாத !!
அடுப்பூத வழிவகுக்க
நீயும் அக்னியில் அழிஞ்சிடாத !!
அண்டிவந்த குடும்பத்தை
அனாதையாக விட்டுடாத !!!
இன்று காவல் போட்டும்,
கட்டுக்குள்ள சிக்கிடாத
கந்துவட்டி திமிங்கலமும்
நாளை கரையொதுங்கி காணாமல் போவதற்கு
கனவு இந்கதியாவில் கண்டிப்பா வழியிருக்கு .
வட்டியில கிடைச்சுடும் கட்டு கட்டாய் கரன்சிகளும் கணக்கில் சேரா சொத்தாய் தான் மாறிப் போகும்.
அரசு சொல்லும் பணமில்லா பரிவர்த்தனை பத்திரப்பதிவிலும்
கட்டாயம் செயல்படுத்த
கருப்பு பணமும் வெளுத்துப்போகும் ,கந்துவட்டியும் ஒழிஞ்சிப்போகும் .
- திவ்யா சத்யப்ரகாஷ்