மெளன விரதம்
மெளன விரதம்
கவிதை by :கவிஞர் பூ.சுப்ரமணியன்
தனிமை மட்டுமல்ல
மெளன விரதமும்
நம்மை பற்றி
நினைக்கத் தோன்றும் !
இனிமை மட்டுமல்ல
மெளன விரதமும்
நம் மனதைப்
புனிதப் படுத்தும் !
உண்மை மட்டுமல்ல
மெளன விரதமும்
நம்மை உயர்வுக்கு
அழைத்துச் செல்லும் !
பெருமை மட்டுமல்ல
மெளன விரதமும்
நம்மை மகிழ்ச்சிக்கடலில்
மூழ்கச் செய்யும் !
வலிமை மட்டுமல்ல
மெளன விரதமும்
நம் உள்ளத்திற்கு
தைரியம் கொடுக்கும்
எளிமை மட்டுமல்ல
மெளன விரதமும்
நம்மை எல்லாம்
எளிமையுடன் வாழ
எளிதில் வழிகாட்டும் !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை