இது மழைக்காலம்

வாடை காற்றோடு
வளைந்து நெளிந்து
மழைச்சாரலோடு நனைந்து
இரவு வீடுசேர்ந்து
இமை மூடி உறங்கி
விடியும் வேளையில்
தினம் விளையாடும்
திடலருகேயுள்ள குளத்தின்
வாயும் வழியும்
காட்சியை காண்கையிலே
கண்ணுக்கும் மனதிற்கும்
மகிழ்ச்சியோடு மைய்யலும் தான்.
ஆம்
இது மழைக்காலம் தான்