ஓடையில் காகித ஓடம்
மேற்கு திசைவானில் கார்முகில் தன்கூட்டம்
மின்னல் இடிமழை ஆட்டம்ஆர் பாட்டம்
பெருகிநீர் ஓடிசாலை எங்கினும் வெள்ளம்
மழைஓய்ந்த பின்விடு கின்றான் சிறுவனும்
ஓடையில் காகிதஓ டம் !
பல விகற்ப பஃறொடை வெண்பா
பள்ளி நாட்களை நினைத்துப் படியுங்கள் .
வெண்பா என்ன வெறும் பாவும் மகிழ்ச்சி தரும் .