மண்ணை உழுது மனதைக் கிளறு

பயிர் நாட்டிடத்தா காலம் கனிஞ்சிடுச்சு கண்ணம்மா//
அடியே நானும் ஒருநடை தச்சனுட்ட போய் வாரேன்
// கொடுத்த கலப்பை என்னாச்சு /
/ என்று ஒருகண் பார்த்துட்டு வாரேன் கண்ணம்மா

மாமா மழை மேகமும் கறுக்குது
மண்ணின் ஈரம் மணக்கிறது
உடனே போயிட்டு வா
என் ஆசை மாமாவே

இம்முறை நல்ல அறுவடை
வந்துடும் புள்ள
கந்தாயனின் கடன் கொடுத்துடனும்
அது போக எஞ்சியத
அடுத்த வருடத்திற்கு
காத்திடணும் என்ன

மாமா பழைய சோறும் பச்சமிளகாயும்
கொண்டு வயலுக்கு நா வாரேன்

உனக்காக நானும் காத்து இருக்கேன் கண்ணம்மா
உச்சி வெயில் பொழுதில
நீ
வடுக்கன் மாட்டையும் அவிழ்த்து கொண்டு வந்து சேர்ந்திடு

ஏ கண்ணம்மா அந்தியும் தான் கழிய போகிறது சீக்கிரமா நானும் வந்துடுறேன்

எழுதியவர் : காலையடி அகிலன் (30-Nov-17, 11:08 am)
பார்வை : 117

மேலே