இயற்கையின் கவிதை

இயற்கையின் கவிதை

வெள்ளை புகையாய்
விண்ணில் நிறைந்து
எதிரில் நிற்பது எதுவென
அறியாமல் !

பாதைகள் முழுவதும் பனித்துளி
காலுறைக்குள் இருந்தும்
கால்கள் விறைத்து

பச்சை கம்பளம்
தலையில் வெள்ளை
பனித்துளி !

அருகருகே மனித கூட்டம்
அனைவரின் கண்கள்
இயற்கை அழகை பருக !

சற்று தொலைவில்
சலனங்கள் இல்லா ஏரி
அங்கும் இங்கும்
இயங்கும் படகுகள்
அதற்குள் இருக்கும் ஜோடிகள்
சுற்றுப்புறத்தை மறந்து !

கரைகளை தொட்டு
மரங்களும் செடிகளும்
வெட்கமில்லாமல்
பார்த்துக்கொண்டு !

தொலைவில் தெரியும்
மலை முகடுகள், உரசிக்கொண்டு
கரும் மேகங்கள் !

என்னால்தான் இந்த
அழகுகள் எல்லாம் சொல்லாமல்
சொல்கிறது !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Nov-17, 11:27 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : iyarkaiyin kavithai
பார்வை : 996

மேலே