வாழ்க்கை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
அன்னை கருவறையில் அவதரித்த முதற்கொண்டு
ஆடி முடித்த பின் அயர்வாக உறங்கும்வரை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
சிறு பிராயத்தில் சிரித்து மதிழ்ந்திருந்த
சிறு கவலைகள் அணுகாத அச்சிருப் பால்யத்தை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
உண்மை உறவுகளை உறவின் பெருமைகளை!
உணர்வின் அருமைகளை! அறிந்த நொடி பொழுதை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
பள்ளி பருவத்தில் பாசாங்கு பல செய்து
படைத்த என் பெற்றோரை பரிதவிக்க விட்டிருப்பேன் என்பதை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
கல்வியை கற்காமல் கண்டவர் பின் சென்று
காலத்தை கழித்து களித்திருந்த வேளையினை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
இளம் வயதில் இயல்பாக மற்றவரைபோல்
இள வட்டங்களை சுற்றி சுற்றி வந்தேனா? என்பதை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
படித்து முடித்தவுடன் பார் ஆள முடியுமென்று
பகல் கனவு கண்டு பசியோடு இருந்ததை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
வீதியெல்லாம் அலைந்து வேலை கிடைக்காமல்
வீடு இல்லாமல் வீதியிலே உறங்கியதை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
பெற்றவருக்கு வாழ்ந்தேனா? பிள்ளைகளுக்கு வாழ்தேனா?
உற்றவருக்கு வாழ்ந்தேனா? உறவுகளுக்கு வாழ்ந்தேனா?
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
பருவ வயதில் படுக்க ஒரு துணை வேண்டுமென்று
பார்த்த பெண்ணை எல்லாம் பக்கத்தில் நிற்க பார்த்து
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
இல்லறத்தில் இறுதி வறை இன்பமாய் வாழ்ந்தேனா?
இன்நாள் வறைக்கும் உறிதிபட சொல்ல முடியவில்லை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
பெற்ற பிள்ளைகள் பெருவாழ்வு வாழ வேண்டி
பெரிதாக சொத்து சேர்த்து வைத்தேனா? என்று
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
உற்றார் உறவுகள் இவன் எதற்க்கும் பயனில்லை என்று
பின்னால் சொல்லுவதை எண்ணி உணருவதை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
இறைவனிடம் நான் சென்று எனக்காக நான் வாழ
இது நாள் வரையிலும் ஏன் நீ தரவில்லை என்றதுக்கு
எள்ளி நகைத்து நீ இத்தனை நாள் வாழ்ந்தாலும்
உனக்காகதான் நீ வாழ்ந்தாய் எப்போது
எனக்காக என்றேனும் வாழ்தாயா? என்று
சொல்லிடும் வேளையினை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று