இயற்கை அவலம்
இயற்கை அவலம்😭😭😭
செடியும், கொடியும், மரங்களாகி,
வெயில மறந்து பொடிநடையாய்
போனார்கள் என் முன்னோர்கள் !!
நாகரிக வளர்ச்சியிலே,
ஊர்தி செல்ல வேண்டுமென,
மரங்கலெல்லாம் காலியாச்சு,
மழையொல்லாம் நின்னுபோச்சு !!
பருவமழை பொய்த்துப்போச்சு,
கழனியெல்லாம் பட்டுப்போச்சு,
அண்ணம் தந்த விவசாயி,
அம்மணமாய் வீதியிலே நிக்கிறாங்க !!
ஆற்று மணல் அள்ளியாச்சு,
ஏரி, குளம் மூடியாச்சு,
நீர் வழிகள் அழிஞ்சுபோச்சு,
சோத்துகாக மாடியிலே கையேந்தி நிக்கிறோமே !!
என்ன அவலம், என்ன அவலம்,
செய்தவினை செய்வினையாய் மாறியதே இங்கு அவலம் !!!
உங்கள்
தௌபீஃக்