இறுமாப்பில் மனிதன், சீரும் இயற்கை

காடுகள் ஏரிகள் பயிர் நிலங்கள்
காணாமல் போகின்றன
பயிர்கள் முளைக்கவில்லை அங்கு
காணுமிடமெல்லாம் புது கட்டிடங்கள்,
நகரங்கள் எல்லை மாறுகின்றன
வேலை தேடி விவசாயிகள் !
நாளை உணவுக்கு சாகுபடி வேண்டும்
விளை நிலத்திற்கு போவதெங்கே ?
துள்ளடைத்துப்போன நீர்த்தேக்கங்கள்,
வங்க கடலில் காற்றழுத்தம் ,
நகரெல்லாம் பெருமழை!
மழைநீர் போக வழிகள் இல்லை ,
தெருவெல்லாம் மழைநீர் வெள்ளம்;
பெருந்தவிப்பில் மக்கள் வெள்ளம்!
யோசித்து பார்த்தால் புரியும்
இயற்கையோடு இன்னும் இணைந்துவாழவில்லை
மனிதா , இப்போதாவது விழித்துக்கொள்வாயா ?
இல்லை உன் இறுமாப்பில் உன் அழிவைத்தேடி
நீயே போக விரும்புவாயோ ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-17, 7:49 am)
பார்வை : 154

மேலே