மனத்தொகுப்பாளன் -3
ஃபீனிக்ஸ் மாலில் ஜனா சஞ்சனாவுடன் இருப்பதைகண்டு நண்பர்கள் அதிர்ச்சியாகின்றனர்
அப்படி என்ன தான் பண்ணான் இவன்
(Back to the Monday conversation)
டேய் கனகு நீ அடிதான் டா வாங்க போற இப்படிலாம் ஏத்தி விடுறதுக்கு
என சொல்லி விட்டு
தனது ரூமிற்க்கு போனவன் அவளுடைய நினைவுகளையே நினைத்துகொண்டு இருந்தான்
அவளோடு அவள் பேசியது மட்டுமல்ல அவன் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாத சில நிகழ்வுகளையும்
வேலை முடித்துவிட்டு வெளியே சென்ற சமயம் அவனுக்கு முன்னே அவள் சென்று கொண்டு இருந்தாள்.
அவனும் ஐம்பது மீட்டர் இடைவெளியில் அவளுக்கு தெரியாமல் அவள் பின்னே சென்றான்.
போகும் வழியில் ஒரு டீ கடை இருந்தது
இவளோ டீ கடைக்கு சென்றாள்
இவனுக்கு ஒன்னும் புரியாமல் ஒரு நிமிடம் நின்றான் அவளோ கையில் டீ கப்புடன் வெளியே வந்தாள்
டீ குடிக்க போறாளோ என நினைத்தான்
கப்பை கடை அருகில் குளிரில் நடுங்கி கொண்டு இருந்த முதியவருக்கு கொடுத்தாள்
மேலும் ஒரு 50 ரூபாய் கையில் கொடுத்துவிட்டு நைட் எதாச்சும் சாப்பிடுங்க என சொல்லிவிட்டு அருகில் உள்ள பேருந்து நிறுத்ததில் நின்றாள்.
பேருந்துகள் கூட்டமாக இருந்ததால் ஆட்டோவினை கை அசைத்து கூப்பிட்டாள்
ஏறினாள் ஏறியதும் இவனுக்கு இவனைவிட்டு அவன் இதயமே பிரிவது போல உணர்ந்தான் தாங்க முடியவில்லை.
பின்னே ஒரு ஆட்டோ வர அதில் ஏறி முன்னே செல்லும் அந்த ஆட்டோ பின்னே செல்லுமாறு சொன்னான்
ஆட்டோ டிரைவர் என்னப்பா சேஸிங் ஆ ??
ஆமான்னா என்கிட்ட இருந்து ஒன்னு திருடிகிட்டு போறானா
அப்படி என்னப்பா திருடிட்டாங்க போனா? பர்ஸா?
அதுலாம் இல்லனா என் இதயத்த ஒருத்தி திருடிகிட்டு போறானா
ஆட்டோ டிரைவர் ஒரு நொடி சிரித்துவிட்டு சரி இப்போ நான் சேஸ் பன்னி கூப்டு போறன் அவ எங்க இறக்குறாளோ அங்கயே உன்ன இறக்கி விடுறன் திருடிட்டு போனத போ வாங்கிட்டு வந்துடுவியா பா ?
வாங்கலாம் மாட்டன்னா அவ எந்த ஏரியானு தெரிஞ்சிட்டு கொஞ்ச நாள்ல அவ இதயத்த திருடிடுவன்னா
பார்ர்ரா என சிரித்தார் டிரைவர்.
ஆட்டோ வை பார்த்துக்கொண்டே சென்றனர் இறுதியாக ஆட்டோ நின்றது
டேய் தம்பி உன் இதயம் இந்த வீட்டுல தான் டா இருக்க போகுது நல்லா பாத்துக்கோ என ஒரு தோழன் போல அவனுக்கு காட்டினார் டிரைவர்.
அவள் இறங்கி வீட்டிற்க்கு உள்ளே சென்றாள் என்ன இடம் இதுனு டிரைவரை பார்த்துகேட்டன்
இது கேசவபெருமாள் ஸ்டீரிட் மைலாப்பூர் டா தம்பி
ஓ என சொல்லி அவனது இதயம் இருக்கும் இடத்தை பார்த்துவிட்டு மறுபடியும் வந்த ஆட்டோவிலே சென்றுவிட்டான் .
அண்ணா சாலையில் அவனை விட்டுவிடுமாறு டிரைவரிடம் சொன்னான் வரும் வழியில் இருவரும் நன்றாக பேசிகொண்டு வந்தனர் ஜாலியாக
நண்பர்கள் போல் இருக்கும் அண்ணன் தம்பி போல் பேசினர் இருவரும் தங்களை பற்றி பறிமாறிக்கொண்டனர்
நானும் லவ் மேரேஜ் தான் டா எங்களுக்கு ஒரு பையன் ஒரு பொன்னு ரொம்ப சந்தோசமா இருக்குறோம்
சூப்பர்னா உங்க ஸ்டோரிய சொல்லுங்கனா டேய் என் ஸ்டோரிலாம் சொல்லனும்னா ஒரு நாள் புல்லா ஆகுமென சொல்லி முடிக்கறதுகுள்ள அண்ணா சாலை வந்தது .
டேய் தம்பி அண்ணா சாலை வந்துடுச்சு டா என உரிமையோடு பேசினார் பிரியும் சமையம் காசு எவ்வுலோனா என கேட்டதும் அதுலாம் ஒன்னும் வேனா என சொன்னார் டிரைவர்
அண்ணா இதுலாம் ரொம்ப ஓவர் என சொல்லி 200 ரூபார் அவரது பாக்கெட்டில் வைத்தான் சரிங்கனா பாப்போம் என சொல்லிவிட்டு பிரியா விடை கொடுத்தார்.
திடிரென பின்னே ஓடிவந்து ஆட்டோவை நிறுத்தினான் ஜனா உங்க நம்பர் கொடுத்துட்டு போங்க என கேட்டான் ஜனா
அவரும் நம்பர் கொடுத்தார் இவனும் இவனது நம்பரில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தான் இருவரும் பிரிந்தனர்.
சந்தோசத்துடன் வீட்டிற்க்கு வந்தான் பிறகு தான் நண்பர்களுடன் பேசியது திட்டியது எல்லாம் பிறகு நினைத்துகொண்டான்
நல்ல வேலை அவ வீடு வரைக்கும் போனதுலாம் சொல்ல ல இல்லைன்னா நாளைக்கே லவ் சொல்ல சொல்லி டார்ச்சர் பண்ணூவானுங்க
எல்லாவற்றையும் நினைத்துகொண்டே படுத்து இருந்தான் சரி இந்த ஒன் வீக் ல நம்மலால முடிஞ்ச பெஸ்ட் கொடுப்போம்
இல்லனா கொஞ்ச நாள் கழிச்சு சொல்லுவோம்
ஆனா லைப் ல இதுவரைக்கும் இப்படி யாருகிட்டயும் இந்தமாதிரி வரல இவ தான் உன் லைப் அவளுக்கு புடிக்குற மாதிரி நடந்துகோன்னு அவனுக்குள்ளே சொல்லிக்கொண்டு படுத்துறங்கினான்
மறுநாள் காலை வேலைக்கு கிளம்பினான்
சொன்னது ஞாபகம் இருக்கட்டும் என சொன்னான் கனகு
காதில் வாங்காமல் தலை சீவிக்கொண்டு இருந்தான் ஜனா
டேய் கோகுல் பாருடா இவன சொல்றத காதுல வாங்காத மாதிரி இருக்கான்
மச்சான் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா ப்ரண்ட்ஸ் சொல்றதுலாம் காதுல விழாது டா என கோகுல் சொல்ல
ஆமா ஆமா காதல் கண்ணை மறைக்கும் விண்ணை பிளக்கும் உன்னை மயக்கும் என அடுக்கு மொழியில் ராஜேஷ் தன் பங்குக்கு எடுத்துவிட்டான்
எப்பா டேய் ஆல விடுங்கடா என சொல்லிவிட்டு வேகமாக ஆபிஸிற்க்கு சென்றான்
டேய் ஏண்டா காலையிலே அவன இப்படி கலாய்க்குரிங்க என கவின் அட்வைஸ் பண்ணதும்
டேய் என்னடா இன்னும் ரெண்டு வருசமோ மூனுவருசமோ அதுக்கு அப்புறம் நாமலே நினைச்சா கூட இப்படி காலையில எழுந்து கலாய்க்கலாம் முடியாது இருக்கும் போதே இப்படி சந்தோசமா இருந்துட்டு போகனும் டா என ஃப்பீலிங் ஓட ராஜேஷ் பேசியதும்
கோகுல் கன்ரோல் மாமா கண்ட்ரோல் என சொல்லி வாயை அடைத்தான்.
சரி இன்னைக்கு யாரு சமையல் பண்ண போறது என ராஜேஷ் கேட்டதும்
கவின் கிளம்பிவிட்டான்
கோகுல் ஹலோ என போனை எடுத்து காதில் வைத்தான்
கனகு மச்சான் நீ ஸ்டார்ட் பண்னு நான் அதுக்குள்ள பாத்ரூம் போய்ட்டு வரன் என சொல்லி கனகு பாத்ரூம் ஓடினான்
இவனுங்க கூடலாம் இருந்துட்டு சைக்க் என சலித்தபடி என கிச்சனுக்கு சென்றான் ராஜேஷ்....
இங்கே ஜனா ஆபிஸ் உள்ளே சென்றான் சென்று தனது பாஸ்வேர்டு போட்டு சிஸ்ட்த்தை ஓப்பன் செய்தான்
நேற்று செய்துவிட்ட அவுட் பார்த்து இன்னுமெதாச்சும் ஆட் பண்ணலாம் என
நேற்று செய்த ப்ராஜெட் ஓப்பன் பண்ணினான்
சிறு சிறு எபெக்ட்ஸ் போட்டு மெருகேற்றிகொண்டு இருந்தான்.
வீடியோ கிளிப்ஸை மாற்றி மாற்றி போட்டு எது நல்லா இருக்கும் என யோசித்துகொண்டு இருந்தான்
சிறிது டையர்டு ஆனதும் தேநீர் குடிக்க கேண்டின் சென்றான் அங்கே முதல் நாள் பார்த்த அண்ணன்
ஹாய் அண்ணா
தம்பி எப்படி இருக்கிங்க
நான் நல்லா இருக்கன்னா நீங்க
நான் சூப்பர் ஆ இருக்கன்பா என்ன சாப்பிடுரீங்க
அண்ணா ஒரு லெமன் டீ கொஞ்சம் சுகர் அதிகமா
சரிபா என சொல்லி போட்டு டீயை
கொடுத்தார் வாங்கி
திரும்பியதும் சஞ்சனாவின் முகம் .
மனதில் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டான்
அவள் சின்னதாய் ஒரு புன்சிரிப்பை வட்டியில்லா கடனாய் கொடுக்க , கடன் பெற்றவன் மிகவும் சந்தோசத்துடன் அடுத்த கணமே கடனை அடைத்தான்
அருகில் உள்ள இருக்கையில் இன்ப இதயத்துடன் சென்று அமர்ந்தான்
நெஞ்சமெல்லாம் சந்தோசத்தின் தாக்கம் அவனை விட்டு அகலவில்லை
சிறிது நேரத்தில் அவனது இதய துடிப்பு இமயத்தின் உச்சிக்கே சென்றது ஃகாப்பி கோப்பையை எடுத்துக்கொண்டு அவன் அருகில் வந்தமர்ந்தாள்.
இவனுக்கோ மனதில் என்ன பேசுவது என பேசுவது என எண்ணங்கள் எட்டுதிசைக்கும் சென்று வார்த்தையை தேடிகொண்டு இருந்தது
வந்தது வார்த்தை அவனிடமில்லை அவளிடமிருந்து
ஜனா வொர்க் எப்படி போய்ட்டு இருக்கு
யா இட்ஸ் குட் என சிறு பதிலை சிந்தையில் தெளிவில்லாமல் விடையாக்கினான்
நீங்க ரொம்ப ஷை டைப்பா என வினவினாள்
இப்போவாச்சும் விவேகத்துடன் செயல்படு டா என அவனுக்கு மூளை கட்டளையிட்டது
அப்படிலாம் இல்லைங்க புது இடம் அதான் யாரும் தெரியாது அதனால தான் கொஞ்சம் சைலண்ட்டா
பட் இனிமே அப்படி இருக்காது
ஏன் இனிமே என்ன ஆக போகுது
அதான் நீங்க இருக்கிங்களே
அவள் மேலும் ஒரு புன்சிரிப்பை கொடுத்தாள் அவனுக்கு, கடனாக அல்ல இலவசமாக அது அவனுக்கு மட்டுமே சொந்தமானது
மனதில் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டான்
பரவால்ல நல்லாதான் பேசுரிங்க என்றாள்
யாரு நானா ஏங்க நீங்க வேற எனக்கு பேசவே தெரியாது அதும் பொண்ணுங்க கிட்டனா சொல்லவே வேணாம் தலையே சுத்திடும்
ஏன் அப்படி சொல்ரீங்க
பின்ன என்னங்க லைப்ல புல்லா பசங்க கூட மட்டும் தான் என் லைப் டிராவல் ஆச்சு
நர்சரி ல ஆரம்பிச்சு MSC வரைக்கும் பசங்க கூடனா எப்படிங்க
அவளுக்கு சிரிப்பு வர ஆரம்பித்துவிட்டது
அடக்கிக்கொண்டு நீங்க எந்த ஊரு
என்னோட நேட்டிவ் பாண்டிச்சேரி
வாவ் செம்ம பாண்டிச்சேரில எந்த ஏரியா என அவள் கேட்டதும் மனதில் முழுசந்தோசத்துடன் ஆரோவில் பக்கதுலனு பதில் சொன்னான்
ஆரோவில் எனக்கு ரொம்ப புடிக்கும் நான் ரெண்டு தடவ அப்பா அம்மா கூட வந்து இருக்கன்
ம்ம்ம்ம் என சிரித்தான் ஜனா
எங்க படிச்சிங்க என அவள் கேட்டதும் நான் லொயோலா காலேஜ் ல என சொன்னான்
என்ன டிபார்ட்மெண்ட்
MA MEDIA AND COMMUNICATION என சொன்னதும் நானும் லொயோலா ல தான் என்னோட PG அப்ளை பண்ண பட் கிடைக்கல ‘
அதற்குள் நீங்க எங்க படிச்சிங்க என கேட்டான்
நான் MOP VAISHNAVA MA COMMUNICATION AND JOURNALISM படிச்சேன்
ஓ…. ஓக்கே
ஆம்மா.. நீங்க எந்த ஊரு என தெரியாதது போல கேட்டான்
நானா நான் இங்க தான் மைலாபூர்
ஆமா நீங்க சென்னையில எங்க தங்கி இருக்கிங்க
நான் கிண்டி ல
சரி ஓக்கே பார்க்கலாம் என சொல்லிவிட்டு கெலம்பிவிட்டாள்
மனது மறுபடியும் எப்போது என கேட்க தோன்றியது
ஆனால் தன் தன்மானத்திற்க்கு இடம் கொடுத்து அமைதியாக புன்னகைத்து திரும்பினான் தன் அறைக்கு.
அறைக்கு போனது முதல் தன் நினைவெல்லாம் அவளது முகமே இன்நேரம் என்ன பண்ணிட்டு இருப்பளோ?...
என நினைத்துகொண்டு இருக்க
தனது டீமுடன் சஞ்சனா பேசிக்கொண்டு இருக்க அங்கு வந்த சீனியர் ஃப்ரொடியுசர் நித்யா என்ன சஞ்சனா உங்களுக்கு கொடுத்த மாஸ்ப் ப்ராஜெக்ட் என்னாச்சு ?
பண்ணிட்டு இருக்காங்க
சரி நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க என கேட்டதும் அமைதியானாள்
இல்ல மேம் ரெஃப்ரன்ஸ் பாத்துட்டு இருக்கன்
மாஸப் ல என்ன ரெப்ரன்ஸ் என்ன திட்டிக்கொண்டு இருந்த்தார் நித்யா
மனதில் கோவத்துடன் நித்யா,
அறியாத பிழையுடன் சஞ்சனா,
சஞ்சனா நினைவுகளுடன் ஜனா…………
(தொடரும்)