யார் பேய் 3

பின்னாடி யாரோ இருப்பது போல் தெரிந்ததால் திரும்பி திரும்பி பார்த்த அபர்ணாவை என்ன பண்ற? என்றான் விஜய்

அண்ணனிடம் சொன்னால் என்ன நினைப்பானோ! என்று தோன்றியதால்
ஒன்னும் இல்லையே!!!!! என சிரித்தாள்

சரி சரி சரி அந்த போட்டோல இருந்தது
யாரு என்றாள்?

அதுவா அது ஒரு பொண்ணு!!!!!

நான் என்ன பையன்னுனா! சொன்னேன்! என திரும்பவும் சிரித்தாள்

அது ஒரு பெரிய கதை..., அந்த பொண்ணாலதான் நான் இப்ப.... என இழுத்து, என் உயிர் என் கிட்ட இருக்கு, என்றதும்

கண்களை அகல விரித்து அவனை பார்த்தாள்,

அவன் அபர்ணா இங்கேயே எங்கேயாவது சாப்பிடலாம? இல்லை கொடைகானல் போய் சாப்பிடலாம? என்றான்

அவள் கொடைக்கானல் போய்ட்டு, உன் ரூம் போய் நான் சமைச்சி தாரேன். உனக்காக தான் நான் சமைக்கவே கத்துக்கிட்டேன் என்று சொன்னாள்.

இவளையா! இவ்வளவு நாள் தனியா வைத்திருந்தோம் என்ற படி அவளை பார்த்தான்

காரானது இருள் சூழ்ந்த பாதையில் இருளை காரின் வெளிச்சமானது கிழித்து கொண்டு சாலையில் சென்றது.

சாலையில் கார் செல்லும் பாதையில் யாரோ நிற்பது போல் தோன்றியது

யாரோ
நிக்குறாங்க,
நிக்குறாங்க,
நிக்குறாங்க,
என கத்திய அபர்ணாவை, எனக்கு கண் தெரியாதா என்ற படி முறைத்து விட்டு சாலையை பார்த்தான்

அந்த உருவம் காரை நோக்கி ஓடி வந்தது, முதலில் மெதுவாக வந்தது.
போக போக வேகம் அதிகம் ஆனது



அதன் மேல் மோதக்கூடாது என்பற்காகவே வலதுபுறம் திருப்பி ஓட்டிய காரின் மேல் அதுவாக மோதியது அந்த உருவம்.

அண்ணா அதை இடிசிட்ட, என கண்ணை மூடிக்கொண்ட அபர்ணாவை, ஏய் பய படாத நான் போய் பாக்குறேன் என்று இறங்கினான்.



அபர்ணாவும் தனியாக காரில் இருக்க பயத்தில் கிழே இறங்கிட, அழகான தென்றல் அவள் கழத்தை வருடியது.

ஒருவித குளிரும் அழகிய தென்றலும் அவர்களை அணைத்து கொண்டது, அவர்களும் காரின் முன்பக்கம் விழுந்த அந்த உருவத்தை பார்க்க ஒடி சென்றார்கள், அங்கே யாரும் இருந்ததாய் தெரியவில்லை

விஜய் சுற்றி சுற்றி பார்க்க, யாரும் அந்த பக்கம் வந்ததற்கான தடயமே இல்லை!

அவள் பயத்தில் வா! நாம கிளம்பலாம் என அவன் கையை பிடித்து இழுத்து காரை நோக்கி செல்ல எத்தனித்து!



காரை பார்த்தவள், முன்பு பார்த்தது போல அந்த பெண் பின் சீட்டில் அமர்ந்திருந்தாள்.

எழுதியவர் : நவின் (28-Nov-17, 10:14 am)
சேர்த்தது : Vijay Navin
பார்வை : 553

சிறந்த கவிதைகள்

மேலே