என்னிதயத்தை கண்டுகொண்டேன் - கதை முதல் பகுதி

விழிகளை திறந்ததும்
அந்த முகமே
நினைவுக்கு வருகின்றது
விழிகளை மூடும்போதும்
அந்த முகமே
கண்ணில் நிற்கிறது ....

மெல்ல விழி திறந்த அவள் லேசான சோம்பலோடு எழுந்து சென்று ஒரு குவளை நீரோடு நாற்காலியில் வந்து அமர்ந்தாள். மெல்ல மெல்ல நீரை பருகி அந்த நினைவுகளை அவள் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள். நீர் குடித்ததும் கொஞ்சம் அவளுக்கு ஏதுவாக தோன்ற சாய்ந்து அமர்ந்து கைபேசியை எடுத்து கொண்டாள்.

அவளுக்கு வந்திருந்த எந்த குறுஞ்செய்தியையும் படிப்பதற்கு முன் முதல் முதலாக கம்போஸ் சென்று ஒரு குட்டி குறுஞ்செய்தியை பதிக்க தொடங்கியது அவளின் விரல்கள். சரியாக கலையாத தூக்கத்திலும் அந்த உயிருக்கென அவள் அந்த இரு வார்த்தைகளையும் பதித்தப் பிறகே அவளுக்கு மூச்சு இயல்பாய் போக தொடங்கி அதுவரை அவளை என்னவோ செய்து கொண்டிருந்த இதயத்தின் திணறல் மெல்ல மெல்ல நின்றது.

குட் மோர்னிங் என்று அந்த அவளின் இரு அன்பு சொல்லை சுமந்து கொண்டு பறந்து அக்குறுஞ்செய்தி.
அவள் மனம் மெல்ல காத்திருப்புக்கு தயாராக ஒரு கானத்தை தனக்குள்ளாக பாட தொடங்கியது.

இன்னும் சரியாக விரியாத அவள் கண்கள் மெல்ல பார்த்தன.ஒரு சரி வந்த்திருந்தது ம் இன்னும் போக வில்லை என மனம் சிணுங்கியது. ஆ இரண்டு டிக் காட்டியது கைபேசி. ஹே என் மெசேஜ் போயாச்சு என்று பதிலை காண இப்போது கண்கள் முழுவதுமாய் விரிந்து இரு தாமரை மலர்களாய் அசைந்து கொண்டிருந்தது .

ஒரு நிமிடம் இரு நிமிடம் மூன்று என்று நிமிடங்கள் கடக்க அப்பக்கம் இருந்து பதிலில்லை என்றதும் சாய்ந்த மலர் விழிகளை அப்படியே மூடிக் கொண்டாள். ம் இப்போது மனசும் விழியும் பூராவும் அவன் முகம் மட்டும். அப்படியே மூச்சை இழுத்து விட்டாள்.

என்ன செய்வது வழக்கம் போல தன்னுடைய பெரிய டைரியை எடுத்து எழுத தொடங்கினாள். அவனோடு பேச முடியாத நேரத்தில் அப்படியே தன் மனதை இந்த நாட்குறிப்பில் இந்த காகிதத்தில் அவள் பேச நினைப்பதை எல்லாம் கொட்டி விடுவாள். அப்படி என்றால் மட்டுமே அந்த ஈர்ப்பு சக்திக்குள் இருந்து வெளியே வந்து அவளால் அடுத்த காரியத்திற்கு நகர முடியும் . மெதுவாக பக்கத்தை புரட்டினாள் அவள் .

அந்த விழிகளை பற்றி எழுதுவதும் சுகம் . பின் அதை வாசித்தாலும் சுகம் .என்றாவது ஒரு நாள் இந்த டைரியை அந்த கையில் திணித்து அந்த விழிகள் வாசிக்கும் போது ஒளிந்து கொண்டு பின் அந்த விழிகள் அதை வாசித்து இவள் விழிகளை thedum போது அந்த தோள்களில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்பது அவள் கனவு.

முதல் பக்கத்தில் தி டிஸ்கவரி ஒப் மை லவ் அதாவது என்னிததயத்தை கண்டுகொண்ட கதை அல்லது என் நேசத்தை நான் கண்டு கொண்ட கதை என்ற தலைப்பிட்டு அது ஆரம்பித்திருந்தது . ஜன்னலோர விடியற்காலை காற்றில் அது மெல்ல பறக்க தொடங்கியது .அடுத்த பக்கம் திறந்தது.


அதன் முதல் வரி இப்படி இருந்தது . . இந்த விழிகளை நான் பார்க்காமல் இருந்திருக்கலாமோ .நான் ஏன் இந்த முகத்தை சந்தித்திருக்க வேண்டும் நான் ஏன் இப்படி என்னை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறேன் .ஏன் நான் எனக்குள் பேசிக்கொண்டிருக்கிறேன் இப்படி .

என் இதயத்துக்குள் இப்படி ஊடுருவி கிடக்கிற இந்த முகம் எப்படி எனக்கு அறிமுகமாகியது . முதல் முதலாக ........... என்று ஆரம்பமாகியிருந்தது அவளின் முதல் பக்கம்

தொடரும்

எழுதியவர் : யாழினி வளன் (28-Nov-17, 3:36 am)
பார்வை : 216

மேலே