உன்னில் எழும்பும்
என்னை எரித்து
சாம்பலாக்கவும்
நீ வேண்டும்
என்னை குளிரூட்டி
கதகதப்பாக்கவும்
நீ வேண்டும்
என்னை கோடையின்
வெப்பத்துக்குள்
நடைபயணம் கூட்டிச்
செல்ல நீ வேண்டும்
என்னை குளிரின்
போர்வைக்குள்
மறைத்து எனக்கு
இதமளிக்க நீ வேண்டும்
என்னை சுடும்
பாலைவனத்தின்
மணலை ரசிக்க
செய்திட உன்னால்
மட்டுமே முடியும்
என்னை குளிர்
பனிக்கட்டிகள் மேல்
நடைபயணம் கூட்டி
செல்லவும் உன்னால்
மட்டுமே முடியும்
உன்னால் எரிந்து
உன்னில் எழும்பும்
உயிராய் நான்