என் மூச்சாகவும் நீ

நான் அண்ணாந்து பார்க்கும் வானமாகவும் நீ
நான் சாய்ந்து வீழும் பூமியாகவும் நீ

நான் ரசிக்கும் தோகை நடனமும் நீ
நான் உதிர்க்கும் மயில் இறகாகவும் நீ

நான் பொத்தி சேர்க்கும் மேகமும் நீ
நான் உதிர்க்கும் மழை துளியும் நீ

நான் உள்வாங்கும் இசை ரீங்காரமும் நீ
நான் ஒதுக்கும் இரைச்சல் சத்தமும் நீ

நான் ருசித்து உண்ணும் இனிப்பும் நீ
நான் வெறுத்து தள்ளும் கசப்பும் நீ

நான் கனலென உச்சுகொட்டும் கோடையும் நீ
நான் கதகதவென ஒட்டிக்கொள்ளும் வெப்பமும் நீ

நான் சாய்ந்து அழுதிடும் சுவர் நீ
நான் ஓய்ந்து சாயும் தோளும் நீ

நான் உதிர்க்கும் கண்ணீர் துளிகள் நீ
நான் சிரித்து பூக்கும் பூக்கள் நீ

நான் வரிந்து கட்டும் ஆடையும் நீ
நான் மறந்து செல்லும் கைகுட்டையும் நீ

நான் பறந்து செல்லும் சிறகு நீ
நான் துறந்து செல்லும் செல்வம் நீ

நான் இறந்தும் தேடும் உயிர் நீ
நான் இருந்தும் விலக்கும் உயிர் நீ

நான் சிறந்து விளங்க உற்சாகம் நீ
நான் மருந்தென ஒதுக்கும் கடுப்பு நீ

என் வாய் மூடாத பேச்சாகவும் நீ
என் இதழ் திறவாத மவுனமாகவும் நீ

என் மூச்சாகவும் நீ
என் மூச்சு திணறலாகவும் நீ

எழுதியவர் : யாழினி valan (29-Nov-17, 11:17 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 481

மேலே