சாதிய உணர்வு

சாதியை கொண்டாடும்
எந்த ஒரு அற்பனும்
தமிழனின் கலாச்சாரம் பண்பாட்டை
பேச தகுதி அற்றவன்தான்.

இன்று,
எம் தமிழ் கலாச்சாரமும் பண்பாடும் சிதைவுற்று போனதற்கு காரணமே
இந்த
சாதிய கூட்டம்தான்.
ஒன்றிணைந்த எம் மரபில்
சாதிய நஞ்சினை கலந்து பிரிவினை செய்து விட்டு ஒவ்வொருவனுக்கும் தனி குலத்தொழில், வாழ்வுமுறை, சாதிப்பெயர், வேறுபட்ட பழக்கவழக்கம், வெவ்வேறு கலாச்சாரத்தை புகுத்திவிட்டு,
ஒவ்வொருவனையும் அடித்து கொள்ளச்செய்துவிட்டு பல நூற்றாண்டுகளாய் பல்வேறு பண்பாடு தோன்ற காரணமே எங்கிருந்தோ வந்து இன்று பண்பாடு பேசும்
இந்த
சாதிய நாய் கூட்டம்தான்,....


ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவடபடாமல் சற்று சிந்திக்க வேண்டும்.
நம் தமிழ் பல்லாயிரம் வருட பாரம்பரியம் கொண்டதென்று சொல்கிறோம்.
நம் மொழி தோன்றியபோது எத்தனை மனிதன் வாழ்ந்திருப்பான்.
இன்றைய மக்கள்தொகை வளர்ச்சியினை அப்படியே பின்னோக்கி கழித்து பாருங்கள்.
ஒரு சிறு கூட்டம்தான் இன்று இவ்வளவு வளர்ந்திருக்கிறது.
இதில் சாதி எப்போது தோன்றியது
ஒரு வேளை சாதியும் மதமும் அப்போதே தோன்றியிருந்தால்
இன்று சாதியின் எண்ணிக்கையை எண்ண முடியாதல்லவா.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் இனத்தில் புகுந்த நயவஞ்சக கூட்டம் இறுகிய இத்தமிழ் சமூகத்தினை சாதியால் வெவேறாக பிரித்து மோதிக்கொள்ள செய்து தனது இனத்தை நிலைநிறுத்தி கொண்டது.
அந்த ஈன சமூகம்தான் இன்று சாதியை வீதிகளாய் பிரித்து வைத்துள்ளது.
சாதி வீழ்ந்து விட்டால் தமிழினம் ஒன்றிணைந்து மிகப்பெரும் வலிமை அடைந்துவிடும்.
இதில் உண்மை இல்லையா?

வெவ்வேறு சாதிக்காரன் தொட்டுக்கொண்டல் அவர்கள் இறந்து போவதில்லை. அவன் வீடு இடிந்து போவதில்லை. ஒரு சாதிக்காரனின் கால் பட்ட நெல்தான் இன்னொரு சாதிக்காரனின் சாப்பாட்டில் உள்ளது அதனால் தீட்டுப்பட்டு அவன் மாண்டு போவதில்லை.

ஆனால் இது நடந்துவிட்டால் இன்று வரை சாதிய தீயில் குளிர் காயும் அந்த நாறிய சமூகம் நடுங்கியே செத்துப்போகும் இதுதான் உண்மை.


இதை விட்டு விட்டு
சாதி உயர்ந்தது பரம்பரியமானது வரலாறு கொண்டது என்று அந்த அற்பர்களின் சூழ்ச்சி வார்த்தைகளை பற்றிக்கொண்டு வீழ்ந்து விடாதீர்கள்.

சாதியும் மதமும் உன் கலாச்சாரம் இல்லை
தமிழுணர்வை மிஞ்சிய வீரமும் இல்லை

தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க இயலாதவனே
சாதியை அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்கிறான்

உலகறியவேண்டிய நல்ல தலைவர்களின் வரலாறுகூட சாதிக்கூட்டத்தால் வீதியின் பெயர்பலகையோடு முடிந்துபோகிறது

எழுதியவர் : தமிழரண் (30-Nov-17, 1:23 am)
சேர்த்தது : தமிழரண்
Tanglish : jothiya unarvu
பார்வை : 1433

மேலே