ஒரு குல்மொகர் காலம்

ஒரு குல்மொகர் காலம்
======================

ரொம்பநாள் கழிச்சி E-Diary திறக்கிறேன், 2003 diary யின், பக்கங்களில்

அவகிட்ட வாத்சாயனா கத்துக்கப்போன நான் நேரப்போக்கில் கதைசொல்லியானேன்,
என்று கதை சொல்லி துவங்கினேனோ அன்று முதல்
அவள் அவளுடைய ஆண் நம்பர்களை, ஒவ்வொருவராக துறந்தாள்,
ஒரு அத்தியாயம் திறந்து முதல் பாராவை படிக்கிறாள்,
அதற்கு நான் ஒரு உதாரணக்கதை சொல்லியே ஆகவேண்டும்.
அப்படித்தான் நான் அவளுக்கு க(வி)தைச்சொல்லியாகினேன்

மித்ரா,
குல்மொஹர் காலத்தின் Royal Poinciana விற்குக்கீழே
அந்த ஒற்றை நாற்காலியில்தான்
நாம் கிடந்திருந்தோம்

வாத்சாயனா - இரண்டாம் அத்தியாயம், முதல் அதிகாரணம்
==================================================

"""Clash with Each Other ஒருவருக்கொருவர் இடையேயான மோதல்களையும், overlap ஒன்றோடொன்றின் ஒத்துழையாமையையும் தவிர்க்கவேண்டுமென்றால், மனிதன் தன் வாழ்க்கையைப்பிரித்து, நூறு வருடங்களுடைய இடைவெளியை தர்மா, அர்த்தா, காமா ஆகியவைகளுடன்
அனுபவித்து வாழவேண்டும்""""

திறந்த அதிகாரம் அவள் மார்போடு மூடப்பட்டது,

ஆப்தமித்ராவின் கைகளிலுள்ள
குல்மொஹர் காலத்திற்குள்,
ம்ருதஞ்சனா
உடலில் ஏதுமற்று குதிக்கிறாள்,
வளர்கிறாள்,
வாழ்ந்துகொண்டிருக்கிறாள்,

மித்ரா,
நீ குல்மொஹர் இதழ்களை,
ஒவ்வொன்றாக பிரித்து
முடிக்கும் முன்பே,
நான் கதைசொல்லி முடிக்க வேண்டும்,
இது இவருக்கான டீல்

இது கதைச்சொல்லியின் வகை

ம்ருதஞ்சனா

காலையில் எழுந்தது முதல்
விஷ்ணு சஹஸ்ரநாமம், குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
சுப்ரபாதங்களுடன்
உபாதைகளை
அவளிடமுள்ள அருவருப்புகளை
கடத்தியாயிற்று
அர்த்தநாரி புகைப்படங்களின் முன்னால் நின்று
கிடைக்காத எல்லாவற்றை
பிரார்த்தித்துவிட்டாயிற்று
இனி பழைய பண்டப்பாத்திரங்களுக்கிடையே புரளவேண்டும்
கொதிக்கும் வாணலியில்
வியர்வை பொறித்த எண்ணெய்யிடம்
நிலைமை விளக்கியாயிற்று

நேற்றிரவின்
அவன் ஆண்ட்ரோஜன்களின் வெறிகளுக்கும்,
வக்கிரம் மறைத்த
காதல் வசனங்களுக்கும்,
ஈடு கொடுத்ததில்
சோம்பலை எங்கே மடித்து சொருகினாள் என்று
மறந்துவிட்டாள்
உணர்விழந்த விழிகளின்
விடியல் சாயங்களை,
அவள் முகக்கண்ணாடி அளக்கிறது

அவன்
அ, ஆ க்களையே
அதிகம் கற்றுக் கொடுத்ததின் விளைவாக
இவளும்
அ, ஆ என்றே கொட்டாவி விடுகிறாள்

சோம்பல் திறக்காத சன்யாசி போல் இருப்பவனின்
ஆசைத்தீராக்குளியலுக்குள்
இன்னொரு சேலை மாற்றியாகவேண்டும்
ஆமாம்
இவனோடு நனைந்து
அவிழ்த்துப்போட்ட
அந்த புடவை கொசுவத்திற்குள்
இழுத்துச்சொருகிய நேற்றைய சோம்பலே
இப்போதுதான்
விடைப்பெற்றது
அதற்குள் இன்னொரு சோம்பலா
கடவுளே
இதை சொருகிக்கொள்ள
இன்னொரு புடவை மாற்றியாகவேண்டுமே

அவிக்கும் இட்லியின் ஆவிவேறு, அது எழும் முன்னம்
இவன் முடிக்கவேண்டுமே
இவளை விடவேண்டுமே
அதே வக்கிரங்கள் மறைந்த அ,ஆ க்கள்
குளியலறை நிலமென்பதால்
தொடை பிளந்திருந்தது
மஜ்ஜையிலிருந்து தனியாக விலகி
இடுப்பு கழுண்டிருந்தது

விருந்து மேஜையில், உறங்கியவளை எழுப்பி
வில்லத்தனமான
கண்ணடித்தலுக்குப் பின்னால்
பிரேக் பாஸ்ட்

ராத்திரி தொடங்கி, காலை ஷூ பாலிஷ் வரை முடிந்துவிட்ட
அந்த கண்களின் ஆற்றலுக்கு
மின்னூக்கியாக
அவன் சொல்லிப்போகும் டாட்டா

வெறுச்சூடி விட்டிருந்தது
உயிரிகளின்
தளவாடங்கள் நிறைந்த நவீன கல்லறை
உணர்வு புதைக்க, உணர்ச்சி மறைக்க ஒளிவிடம் வேண்டும்

வீட்டில், தேவையில்லாமல் எரிந்துகொண்டிருக்கும்
மின் விளக்குகளின்
உயிர் பிடுங்கிவிட்டாள்
அறைகளில்
சும்மா சுற்றிக்கொண்டிருந்த
வின்விசிறிகள்
ஆட்டம் நிறுத்திவிட்டாள்
படித்து,
பாதி முடித்த புத்தகங்களை
படுக்கையினின்று
எடுத்து மூடி
வார்டரோபில் அழகாக அடுக்கிவைத்துவிட்டாள்
கார்டனில், பூக்கூட்டங்கள்,
உயிர்ப்போடு பொலிவுற்றிருக்கிறதா
என்று ரசித்து முடித்துவிட்டாள்
பித்துத் தீரும்வரை
தொலைகாட்சி சேனல்களை
மாற்றி மாற்றி
பிடித்த சீரியல்களைப் பார்த்து முடித்துவிட்டாள்

திண்கரை பரண்களை
சுத்தம் செய்ய எத்தனித்தபோதுதான்
அது கண்களில்
தென்பட்டது
"திருமண செருகேடு"
இறந்த மாமியார்
அவளைப் பார்த்த போதெல்லாம்
"வயிற்றில் புழுப்பூச்சியில்லை என்று"
பழித்துக்கொண்டிருந்த ஆண்டுகள் அதனூடே கடந்திருந்தன

தன்னின், கணவனின்,
கலர் யௌவனங்கள் தழுவிப்பார்க்கிறாள்
அன்று இருந்து
இன்று இல்லாத சிலரை ஒர்க்கிறாள்

""நினைவின் சில்மிஷங்கள்""
போர்னிக்கேஷன் செய்த
ஆரம்ப நாட்களை ஞாபகப்படுத்தவே
அவன் தொலைப்பேசிக்கு இருமுறை உயிர்க்கொடுக்கிறாள்
இருமுறையும்
இணைப்புத்துண்டிக்கப்பட்டது

எண்ணிக்கையற்ற காலோச்சுகளுக்குப்பிறகு
வேறென்ன செய்வது
பசியில்லை
இருப்பவற்றை
நாயிற்கோ பூனைக்கோ கொட்டிவிட்டு
அந்த முட்டை
குஞ்சு பொறித்ததா என்று
தோட்டக்கொடி பந்தலில்
குருவிக்கூட்டை எட்டிப்பார்க்கிறாள்

ரசிக்கக்கூடிய
பிரசவங்களை
பிரபஞ்சம் பிறத்திருப்பதுவும்
ஒரு ஆறுதல்தான் என நினைத்துக்கொண்டாளோ என்னவோ
சில நொடி மௌனம், ஒரு ம்ம்மிற்கு பிறகு
கீழிறங்கிக்கொண்டாள்

நேரம் வைகிற்று
ஜன்னல் திரைத் திறந்தவள்
அவன் காரின்
ஹாரன் சப்தம் வருகிறதா என்று
கருத்த மண்புழுபோல நெளிந்த
அந்த தொலைதூர சாலையை
இமைக்காமல் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தாள் ம்ருதஞ்சனா

உதாரணக்கதை முற்றும்

அடுத்த அதிகாரணியில் சந்திக்கிறேன் ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (30-Nov-17, 3:01 am)
பார்வை : 166

மேலே