யாமே தமிழர்
மதியனில் ஒருவன் சிறந்தவன் என்றால்
சதியினை முழுவதும் வெல்பவன்
என்றால்
விதியையே மாற்றம் கொள்பவன்
என்றால்
அவன் தமிழனாய் பிறந்திட தகுந்தவன் என்பேன்
இனத்தின் மீது இணக்கம் கொண்டால்
மொழியின் வலிமையை உணர்ந்து கொண்டால்
நாட்டில் நலனிலே அக்கறை
கொண்டால்
அவன் தமிழனாய் பிறந்திட
தகுந்தவன் என்பேன்
பசியினில் வாடும் உயிரைக்
கண்டதும்
உயிரையும் தந்து பசியினைக்
கொல்பவன்
திசையெங்கும் உதவிகள் செய்து
மனிதம் போற்றும் மனிதனாய்
வாழ்பவன்
தமிழனாய் பிறந்திட தகுந்தவன்
என்பேன்
நீதியில் சிறிதே தோல்வி
கண்டதும்
வீதியில் இறங்கிடும் போர்க்குணம்
கொண்டவன்
வேலிகள் இட்டு அடக்கிட
நினைத்தால்
அறத்தின் வழியே சரித்திரம்
படைப்பவன்
தமிழனாய் பிறந்திட தகுந்தவன்
என்பேன்
இத்தகைய குணம் பெற குடுப்பினைப் பெற்றவன்
தமிழனாய் பிறந்து பெருமிதம்
கொள்வான்
தமிழனாய் வளர்ந்து சிறப்பிடம்
பெறுவான்
தமிழனாய் மடிந்து சரித்திரம்
படைப்பான்.
-அ.ஜுசஸ் பிரபாகரன்