தென்னை மரத்தின் பயன்
தென்னை மரம்
தென்னை :
தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெரா ஆகும். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு.
பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.
தட்டவெப்பம் :
மணற்பாங்கான நிலத்தில் வளரக்கூடியது, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.
அமைப்பு :
தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது. 15-30 மீட்டர் உயரமாக வளரும்.
தென்னை காணப்படும் இடங்கள் :
தென்னிந்தியாவில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஒரிசாவிலும் தேங்காய் மரத்தை அதிக அளவு காணலாம்.
தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
தென்னையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் :
இளநீர், தேங்காய் , தேங்காய் எண்ணெய் , தெழுவு , கருப்பட்டி, கள்ளு, மரம், விறகு, தேங்காய் நார், தென்னங் கீற்றானது கை விசிறி, பந்தல் போடவும், அடுப்பு எரிப்பதற்கும் பயன்படுகிறது.
இளநீரின் பயன்கள் :
தென்னை மரங்களில் பாளை (பூ) விரிந்த 2 வாரங்களில் ஆண் பூக்கள் மலர்ந்து உதிர்ந்துவிடும். 3–வது வாரம் முதல் பெண் பூக்கள் கருவுறுதல் நிகழ்ந்து பிஞ்சுகளாக வளர தொடங்கும். சுமார் 150 நாட்களில் இருந்து 180 நாட்களுக்குள் நல்ல இளநீராக கிடைக்கும்.
சிறுநீர் எரிச்சல், குடல் எரிச்சல், உடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை இளநீர் சீராக்கும்.
இளநீர் நா வறட்சியை போக்கி தாகத்தை தணிக்கிறது. அயன், மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாது சத்துகள் இளநீரில் உள்ளது.பற்கள் பாதுகாப்புக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான சுண்ணாம்புச்சத்து 29 சதவீதம் இளநீரில் உள்ளது.
தென்னையின் மருத்துவப் பயன்கள் :
தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது.
தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து அனைத்தும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும்
மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடிக்கப்படும் சாறு நல்ல மருந்து ஆகும்.
புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தைச் சேர்த்து, தோல் நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது. மற்றும் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.