காதல் சோகம்
இனி ஓர் பெண் வேண்டாம்
என் வாழ் நாளிலே
இதுவரை இழந்தது போதும்
எல்லாமே அவள் தந்த மோகம்
சிறு சிறு சில்லாய்
அவள் நினைவை உடைப்பேன்
சிறகை விரித்து என உலகை இரசிப்பேன்
இனி நினைத்திட ஓர் உறவு இல்லை
என் தேடலில் ஓர் காதலி இல்லை
ஒரு கிளி ஒரு கூடு
நேற்று வரை என் மரத்திலே
பல கிளி பல கூடு
இனி என் வனத்திலே
நாம் இருவர் மட்டும்
என்று வாழ்ந்தேனே
இனி உலகம் முழுவதும்
என் உறவென வாழ்வேனே
புரியாத பெண்ணோடு புழங்கி
பழகிட முடியாது
புரிந்து கொள்ள பிரிவைத் தவிர
வேறு வழியேது