அன்பே வந்துவிடு

உன் நினைவுகளில்
ஏறி இறங்கும்
என் மூச்சுக்காற்றின்
வெப்பம் என்னை
அழுத்துவதற்குள்
அன்பே வந்துவிடு

உனக்காக நான்
ஏங்கி ஏங்கி
என் விழிகளை
சுழற்றி சுழற்றி
அயர்ந்து போவதற்குள்
அன்பே வந்துவிடு

உன் நினைவுகளோடு
நான் வாழ்ந்து
இது போதுமென
மடிந்து போவதற்குள்
அன்பே வந்துவிடு

உன் கனவுகளோடு
நான் கரைந்துபோய்
காலத்துக்கும் இனி
கற்பனைகள் போதுமென
கற்பனைக்கு என்
கண்களை விற்று
கண் மூடுவதுற்குள்
அன்பே வந்துவிடு

உன் கவிதைகளோடு
நான் உலையாகி
கனல் காற்றோடு
எரிந்து போவதற்குள்
அன்பே வந்துவிடு

என் நெஞ்சொடு
நீ எனக்குள்
தீராத வலியாக
மாறிப் போவதற்குள்
அன்பே வந்துவிடு


என் ஆசைகளெல்லாம்
அவஸ்தை கொண்டு
துறவு பூண்டு
உன்னை விட்டு
வெகு தூரம்
போவதற்குள்ளாக

என் அன்பெல்லாம்
அலைகளாக மாறி
என்னை அமிழ்த்து
சாகடிப்பதுற்குள்
அருகில் என்னருகில்
அன்பே வந்துவிடு

என் நேசமெல்லாம்
பெரு மணலாக மாறி
நான் அதற்குள்
புதைந்துபோய் என்
மூச்சை நிறுத்துவதற்குள்
அன்பே வந்துவிடு

என் தவிப்பெல்லாம்
தகிக்கும் நெருப்பாய்
மாறி என்னை
உயிரோடு வைத்து
சிதை மூட்டும்முன்
அன்பே வந்துவிடு

என் தாகமெல்லாம்
தீராத நோயாய்
மாறி என்னை
கொன்று தீர்ப்பதற்குள்
அன்பே வந்துவிடு

என் தேகமெல்லாம்
உன் பெயரையே
சொல்லி சொல்லி
துடிக்கும் இந்த
அணுக்கள் எல்லாம்
காதல்வலி தாங்காமல்
கரையான்களோடு
மரித்துப் போவதற்குள்
அன்பே வந்துவிடு

உனக்காகவே வாழும்
என்னுயிர் இனி
நீ இல்லாமல்
ஆக்சிஜென் வேண்டாமென
உண்ணாவிரதம் இருந்து
உயிர் நீப்பதற்குள்
அன்பே வந்துவிடு

எழுதியவர் : யாழினி வளன் (30-Nov-17, 3:38 pm)
சேர்த்தது : யாழினி வளன்
Tanglish : annpae vanthuvidu
பார்வை : 511

மேலே