உண்மை நட்பு

தலை முடி நிரைத்து விட்டது,
சருமம் சுருங்கி விட்டது,
உற்றார் உறவினர்
அனைவரும் கைவிட்டனர்,
ஏன் உற்றவள்கூட
உயிருடன் இல்லை,,
உலகமே நிறைந்து உள்ளது
ஆனாலும்
நான் மட்டும் ஏனோ தனிமை,
என்னருகே நீ இருந்த அந்த நிமிடங்கள்,,
உன்னருகே,
என் உலகத்தை கண்ட அந்த நாட்கள்,,
மீண்டும் வேண்டும் என் தோழா,
மீண்டு வருவாயா என்னை மீட்க!!!
உன்னை தேடுகிறது என் கைகள்.,,
உன்னோடு கைகோர்த்து
உலகை வலம் வர!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (1-Dec-17, 5:55 pm)
Tanglish : unmai natpu
பார்வை : 639

மேலே