நண்பன்,நட்பால் உயர்ந்தவன்
வாழ்க்கையில் எல்லாம் இழந்து
சீரழிந்து நாதி இல்லாமல்
உற்றார் உறவினரும் கைவிரிக்க
குடும்பத்தோடு தெருவோரம் வந்து
நின்றவனை நீண்ட இரு கரங்கள்
அணைத்து அடைக்கலம் தந்தது
மீண்டும் அவன் வாழ்க்கையில் மறுமலர்ச்சி
புது வசந்தம் ....... இவன் வாழ்க்கையில்
மறுமலர்ச்சி, தந்தவனோ இல்லை நிலவுலகில்
நண்பன் அவனை இவன் இன்றும் காண்கின்றான்
வானில் நட்பெனும் துருவநட்சத்திரமாய்
நானிருக்க பயம் உனக்கு வேண்டாம்
என்று மின்மினுக்க மின்னிக்கொண்டிருக்கின்றான்
நண்பனால், நட்பால் உயர்ந்த இவன்
நண்பனை அவன் நட்பை மனதில்
இருத்தி தெய்வமாய் தொழுகின்றான் .