நட்பு

நான்
பள்ளி பருவத்தை
முடித்த போது
என் தோழியை விட்டு
பிரிந்து விட்டேன் என்று
நினைத்து வருந்தினேன் !
சில காலங்களில் என்
இளங்கலை படிப்பையும்
முடித்த போது
என் அண்ணன்களை விட்டு
பிரிந்து விட்டேன் என்று
எண்ணி வருந்தினேன்!
ஆனால்,
மேற்படிப்பில் சேர்ந்த போது
உன்னை கண்டேன்!
அந்த கவலைகள் எல்லாம்
மறந்து போனது
ஏனெனில்
நீ செய்யும் ஒவ்வொரு
செய்கையும் அவர்களை
எனக்கு நினைவு படுத்தியது!
அவர்கள் என்னுடன் இல்லாமல்
போனாலும் என்னுடனே இருப்பது
போல ஒரு உணர்வை தந்தவள்
நீயே தானடி என்
தோழி!!!!!!!!!