வறண்ட ஆறுகளின் வெள்ளம் கடலுக்குள்

திருநெல்வேலி...
மீண்டும் காரின்
முன்பக்க கண்ணாடியில்
அழகாய் நீர்வீழ்ச்சி...
ஆனால் சற்று வேகமாய்...

மழை பொய்க்கவில்லை...
மழை பெய்யுமெனச் சொன்ன
வானிலைமையச் செய்தியும்
பொய்த்திடவில்லை...

மாதம் மும்மாரி
பெய்தால் செழிப்பு...
மாதம் முழுதும் மழை பெய்தால்
செழிப்போ செழிப்பு...

மழைமானிகள் திணறுகின்றன...
வானத்திற்கு மேகங்களை
அனுப்புவதால்
கடல்கள் வற்றுவதில்லை...
மழைவெள்ளம் கடல்புக
கடல்மட்டம் கூடுவதில்லை...

வாடிவறண்டிருந்த ஆறுகள்
மழைவெள்ளம் தாங்காமல்
கடலுக்குள் அனுப்பும் வெள்ளம்
கடலுக்குத் தேவையில்லை...
அது கோடையில்
வயல்களுக்குத் தேவை...
தண்ணீருக்கு சண்டை பிடிப்பவர்களே!
தண்ணீரைச் சேமியுங்கள்...
கோடைகள் செழிக்கும்...
👍🙋🏻‍♂😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (30-Nov-17, 4:52 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 292

மேலே